இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

அத்யாத்ம ராமாயணம்
லிபரல் பாளையத்து கதைகள்
முமியா: சிறையும் வாழ்வும்
நினைவுகளின் பேரலைகள்
நெட்வொர்க்-களின் அடிப்படை விளக்கங்கள்
நரிக்குறவர் இனவரைவியல்
நினைவின் குட்டை கனவு நதி
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
பலசரக்கு மூட்டை
பள்ளிப் பைக்கட்டு
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
மோகத்திரை
அறிவாளிக் கதைகள்-1
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
கிராமத்து பழமொழிகள்
குறள் வாசிப்பு
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கோலப்பனின் அடவுகள்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
கிருஷ்ணதேவ ராயர்
சந்தனத்தம்மை
கயமை
ஜீவனாம்சம்
விவேக சிந்தாமணி
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
பணத்தோட்டம்
கரை சேர்த்த கட்டுமரம்
உ வே சாவுடன் ஓர் உலா
Notes From The Gallows
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் 


Reviews
There are no reviews yet.