HINDU – SAIVAM – VAINAVAM – OR ARIMUGAM
இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கிய (இந்து மதம் ஓர் அறிமுகம்; சைவம் – ஓர் அறிமுகம்; வைணவம்- ஓர் அறிமுகம்) தொகுப்பு நூலாகும். இந்த நூல் அனைத்துத் தரப்பினரும் இவை குறித்து அறிந்து கொள்ள உதவும். இந்து சமயம் கடல் போன்றது. சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் … என்று பாகுபடுத்துவதோ, த்வைதம், அத்வைதம், என்று பாகுபடுத்துவதோ சில தனித் தன்மைகளை வற்புறுத்தப் பயன்படலாம். வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், ஒற்றுமையினையும் வற்புறுத்துவதே இந்து சமயம். ‘சைவம்’ மற்றும் வைணவம் சில கருத்துக்களை எதிர்க்க எழுந்த ஒன்றன்று. தெய்வீக வாழ்க்கையை ஒரு கோணத்திலிருந்து சிறப்பாக விளக்குவது. தமிழ் இலக்கியம் பயிலும் மாணாக்கர்களுக்குத் துணையாகலாம் என எண்ணியே இந்நூல் வெளியிடப்பட்டாலும் பொதுவாக சமய அன்பர்களுக்கும் இந்நூல் ஓரளவு துணை செய்யும்
Reviews
There are no reviews yet.