Idhayaththai thirudugiraay
கார்த்திகா கையை நீட்டி மழை நீரை உள்ளங்கையில் பிடித்தபடி, “அப்புறம்… வேற எந்த மாதிரி பொண்ணுங்கள பிடிக்கும்?” என்றாள் என்னிடம். நான், “இந்த மாதிரி மழை நீரை கைல பிடிச்சு விளையாடறப் பொண்ணுங்கள பிடிக்கும்” என்றவுடன் சட்டென்று கையை பின்னுக்கிழுத்த கார்த்திகா உதட்டிற்குள் புன்னகையை மறைத்தபடி என்னை முறைத்தாள். “அப்புறம்… உதட்டுக்குள்ள சிரிப்ப அடக்கிகிட்டு முறைக்கிற பொண்ணுங்கள பிடிக்கும்” என்றேன். “ஏய்…” என்று அவள் வெட்கத்துடன் தலையைத் திருப்பிக்கொள்ள… நான், “வெட்கத்தோட முகத்தைத் திருப்பிக்கிற பெண்களப் பிடிக்கும்…” என்றேன். “ஏய்…. இப்ப நீ என்னை வெக்கப்பட வைக்கிற நீ…” என்றாள் அழகாக சிரித்தபடி “இப்ப நீ என்னை கவிதை எழுத வைக்கிற…” என்றேன் அவள் சிரிப்பை ரசித்தபடி. “ஹேய்… இப்ப நீ என்னை கோபப்பட வைக்கிற…” என்றாள் பொய் கோபத்துடன் “கோபத்துல கண்ணுங்க சிரிக்கிற பொண்ண இப்பத்தான் பாக்குறேன்…” “கண்ணு சிரிக்குமா?” “ம்… என் முன்னாடி உன் கண்ணு சிரிக்கும்…” ————————————————————————————————————————————————————————————————— ஸாரா, “என்கிட்ட மட்டும் எவனாச்சும், ‘என் இனியப் பொன்நிலாவே…’ பாட்ட முழுசா கிட்டார்லயே வாசிச்சுக் காட்டினான்னா, அடுத்த நிமிஷமே அவன்கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லிடுவேன்” என்றாள் ஷோபனாவிடம். “நிஜமாவாச் சொல்ற?அவன் எவ்வளவு மோசமானவனா இருந்தாலும் பரவாயில்லையா?” “முட்டாள்… ‘என் இனிய நிலாவே’ பாட்ட அழகா கிட்டார்ல வாசிக்கிறவன், எப்படி மோசமானவனா இருக்கமுடியும்?

மாபெரும் தமிழ்க் கனவு						
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்						
கவிதையும் மரணமும்						
ஸ்ரீதரன் கதைகள்						
மலைகளை தவிரவும் எனக்கு நண்பர்கள் இல்லை						
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு						
Reviews
There are no reviews yet.