இங்கு பஞ்சர் போடப்படும்
வாகனங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டன. வாகனங்கள் மூலமாக நமக்கு ஏற்படும் அனுபவங்களும், டாச்சர்களும் ஏராளம். லிஃப்ட் கொடுப்பது, குடும்பச் சுற்றுலா, டிராஃபிக் போலீஸ் என அனைத்து ஏரியாக்களையும் நகைச்சுவையுடன் அணுகுகின்றன இந்தக் கட்டுரைகள்.
ஆட்டோமொபைல் பத்திரிக்கையில் இதைப்போன்ற வாய்விட்டு வெடிச்சிரிப்பு சிரிக்க வைக்கும் கட்டுரைகள் வெளியானது இதுவே முதன்முறை. நமக்கு நடந்த, நாம் கடந்து வந்த வாகன அனுபவங்களை துள்ளலுடனும் சிரிப்புடனும் நமக்கே நியாபகப்படுத்துகின்றன.

கனம் கோர்ட்டாரே!
English-English-TAMIL DICTIONARY
Red Love & A great Love
English-English-TAMIL DICTIONARY Low Priced
Quiz on Computer & I.T.
2600 + வேதியியல் குவிஸ்
Compact DICTIONARY Spl Edition
Moral Stories
Mother 
Bhojan –
இங்கு பஞ்சர் போடப்படும் – அராத்து – கட்டுரை தொகுப்பு – பதிப்பகம் – எழுத்து பிரசுரம்- முதல் பதிப்பு – 2016பக்கம் -113
அராத்துவின் பொண்டாட்டி நாவலின் விமர்சனம் வாசித்தி விட்டு அந்த நாவல் வசிப்பதற்கு முன் வேறு ஏதாவது அவர் எழுதிய புத்தகத்தை வாசிக்க வேண்டும்.என்று எண்ணத்தில் தேடும் போது தான் கிடைத்தது இந்த கட்டுரை தொகுப்பு . சாதாரணமாக அராத்து அவர்கள் முகநூலில் எழுதும் கருத்துக்கள் சற்று வித்தியாசமாக இருக்கும் அவரின் சில கருத்துக்களில் எனக்கு உடன் பாடு இல்லாத பொழுதும் கூட அவரின் வித்தியாசமான நகைச்சுவையும் பகடி செய்யும் எழுத்து நடயம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
புத்தகம் பற்றி
இந்த புத்தகம் முன்னமே சொன்னது போல இது ஒரு நகைச்சுவை கலந்த கட்டுரை தொகுப்பு . மொத்தம் 13 தலைப்புகளில் கட்டுரை இருக்கிறது எனக்கு இந்த புத்தகத்தில் எல்லா கட்டுரையும் பிடித்து இருக்கிறது அது
முதல் கட்டுரையான royal enfield வண்டி வாங்க அவர் பட்ட அவஸ்தை முதல் கடைசியாக license வாங்க rto வண்டி ஒட்டியது வரை , அது போல லிப்ட் கொடுத்து அதனால் ஏற்பட்ட அவஸ்தை , two wheeler வண்டியை யாரோ தெரியாத நண்பரிடம் கொடுத்து விட்டு அதனால் வந்த பிரச்னை அது போல serviceகு வண்டி போகும் போதும் ட்ராபிக் போலீசிடம் மாட்டும் போதும் படும் சிக்கல் சொல்லவே தேவை இல்லை . அது போல குடும்ப சுற்றுலாவோ அல்லது நண்பர்கள் சுற்றுலாவோ உங்களுக்கு மட்டுமே வண்டி ஓட்ட தெரிந்தால் நீங்கள் படும் பாடு சொல்லிமாளாது ஏன வாகனம் வைத்து இருக்கும் அனைவரும் சந்திக்கும் பிரச்னையை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார்.இதை படிக்கும் போது நமக்கும் இது போன்ற பிரச்சனைகள் நம் வாழ்விலும் நடந்து இருக்கும் என்று உணர முடியும் .இந்த புத்தகம் படிக்க படிக்க நல்ல விறுவிறுப்பாக இருக்கும் சோர்வு தட்டாது கிட்டத்தட்ட ரெண்டு நாட்களில் இந்த புத்தகத்தை நிதானமாக நிறுத்தி படித்தால் கூட முடித்து விட முடியும் .படிக்க வேண்டிய புத்தகம் இது .
Book My Book –
உங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு நன்றி.!