ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கில் பணி நிமித்தம் வசிக்கிறார். 15 ஆண்டுகள் வளைகுடா நாடுகளில் சுற்றித் திரிந்தவர். இணைய இதழ்களில் வளைகுடா நாடுகளின் அரசியல் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். மதுரையின் டி.கல்லுப்பட்டி இவரது சொந்த ஊர்.
ஈராக் – நேற்றும் இன்றும்
Publisher: தடம் பதிப்பகம் Author: ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.
Iraq – Netrum Indrum
ஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது. ஒரு பயணக்கட்டுரை போலவும் இல்லாமல், ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல், இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையைப் பற்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான். இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே. ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கின் இந்தப் பக்கத்தோடு, அதன் வளமை, ஈராக்கியர்களின் அன்பு, இந்தியர்கள் மீதான மரியாதை என்ற இன்னொரு பக்கத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இப்புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு இந்தியரும், தங்கள் அமைதியான இந்திய வாழ்க்கையின் பெருமிதத்தை ஒப்பிடாமல் கடக்கவே முடியாது.
– தடம் பதிப்பகம்
Delivery: Items will be delivered within 2-7 days

RSS ஓர் அறிமுகம்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Quiz on Computer & I.T.
5000 பொது அறிவு
Alida
Red Love & A great Love
Arya Maya (THE ARYAN ILLUSION)
Bastion
இந்தக் கணத்தில் வாழுங்கள்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு" 


Reviews
There are no reviews yet.