KALVI SUTRULA NADATHUVADHU EPPADI?
ஆசிரியர் பணியில் நான் பெற்ற பல்வேறு அனுபவங்களில் முக்கியமானதும், பயனுள்ளதுமான ஒரு அனுபவம், மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்று வந்ததே ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் `சடையம்பட்டி’ என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 1989ல் முதுகலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பணியாற்றிய சில மாதங்களில் மாணவர்களின் அறியாமை, பின்தங்கிய நிலை, வெளிஉலகம் தெரியாத நிலை பற்றி அறிந்தேன். இந்நிலையில் தலைமையாசிரியரை அணுகி மாணவர்களை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்ல அனுமதி கேட்டபோது, தலைமையாசிரியர் அளித்த பதில் கேட்டு வியப்படைந்தேன். மாணவர்களுக்கு உதவ வேண்டுமானால் தொடர்வண்டி நிலையம் அழைத்துச் சென்று தொடர்வண்டியைக் காண்பித்து முடியுமானால் தொடர் வண்டியில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்றார். தலைமையாசிரியர் கூறியது எந்த அளவிற்கு சரியானது என்பதை அறிய 6 முதல் 12ம் வகுப்பு
Reviews
There are no reviews yet.