Karuvalaiyum Kaiyum KU.PA.RA. Kavidhaikal
அவன் (கு.ப. ராஜகோபாலன்) எழுதியிருக்கும் கவிகள் ‘கருவளையும் கையும்’ என்ற தலைப்பில் ‘மணிக்கொடி’யில் வெளிவந்தன. அது ஒரு புது முயற்சி… படித்தால் கவிதா உணர்ச்சி ததும்பும். ஆனால் உருவத்தில் வசனம் போல இருக்கும். யாப்பு மருந்துக்குக்கூட இராது… உவமை அழகும் உணர்ச்சிப் பெருக்கும் சொல்வளமும் நிறைந்த கவிதை’ என்று ந. பிச்சமூர்த்தி குறிப்பிடுகிறார். சிறுகதைத் துறையில் மட்டுமல்ல, நவீன கவிதையிலும் முன்னோடியாக விளங்குபவர் கு.ப.ரா.
1934இல் தொடங்கி 1944ஆம் ஆண்டு அவரது இறப்பு வரைக்கும் தொடர்ந்து கவிதைகள் எழுதினார். அவற்றைத் தொகுத்துக் ‘கருவளையும் கையும்’ என்னும் தலைப்பில் நூலாக்கம் செய்ய முயன்றார். அது வெளியாகியிருந்தால் தமிழ் நவீன கவிதையின் முதல் தொகுப்பாக விளங்கியிருக்கும். அவரது ஆசை ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிறைவேறியுள்ளது. அவரது கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுக் கால வரிசைப்படி இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. பாட வேறுபாடு கொண்ட கவிதைகளின் இரு வடிவங்கள் அடுத்தடுத்து உள்ளன. முன்னுரைகள், பின்னிணைப்புகள், அகராதிகள், வாழ்க்கைக் குறிப்பு ஆகியவையும் முறையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
நவீன கவிதை முன்னோடி ஒருவரின் கவிதைகள் எவ்வகையில் வெளியாக வேண்டுமோ அவ்வகையில் செம்பதிப்பாக இந்நூல் உருவாகியுள்ளது.
Reviews
There are no reviews yet.