குமரிக்கண்டமா சுமேரியமா?
Publisher:
கிழக்கு பதிப்பகம் Author:
பா.பிரபாகரன்
தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா? அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? தமிழர்களின் தாய்நாடு எது? தமிழர்களின் தோற்றத்தை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தேடிச் செல்லும் இந்நூல், இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள் ஆகிய ஆதாரங்களை மீள்வாசிப்பு செய்து ஒரு புதிய கோட்பாட்டை முன்வைக்கிறது. தனது தேடலின் ஒரு பகுதியாக பண்டைய சுமேரிய வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் நூலாசிரியர் பா. பிரபாகரன், தமிழர் நாகரிகத்துக்கும் சுமேரிய நாகரிகத்துக்கும் இடையிலான சில பிரமிக்கத்தக்க ஒற்றுமைகளைக் கண்டடைகிறார். அதன் அடிப்படையில் உருவாகும் அவருடைய கோட்பாடு சில புதிய சாத்தியங்களை நம் முன் வைக்கிறது. சிந்துசமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், தமிழ்சம்ஸ்கிருதத் தொடர்பு, ஆரியரின் வருகை, சங்க இலக்கியம் என்று பரந்து விரிந்து செல்லும் இந்தப் புத்தகம் பலருடைய ஆய்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. தமிழர்களின் தொன்மம், தோற்றம், பரவல் ஆகியவற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படவிருக்கும் இந்நூல், சில முக்கிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்புகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
சீ.ப்பி. செல்வம் –
#சுமேரியர்கள்தான்_தமிழர்களா…?
#அத்திரம்பாக்கத்தில் அகழ்வாய்வு செய்து, 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட #கல்லாலான_கருவிகள் கிடைத்ததன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்ன?
#மடகஸ்கார் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட அழிந்துபோன இனத்தின் படிமங்கள் #உதகையில் கிடைத்திருக்கிறதே, அது எப்படி?
சுமேரியாவில் பாய்ந்து வளம் கொழித்து பல நகர அரசுகளை அமைப்பதற்கு காரணமாக இருந்த #யூப்ரடீஸ் ஆறுதான் #பஃகுரளி ஆறா?
சுமேரியாவின் #டைகிரீஸ் நதிக்கு குதித்து ஓடும் #குமரி ஆறு என்ற பெயரா?
முதல் சங்கம் #தென்மதுரையில் தோன்றியது என்றும், இடைச்சங்கம் #கபாடபுரத்தில் உதயமானது என்றும் படித்தோமே, அவற்றையெல்லாம் கடல் கொண்டு போய்விட்டது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொன்னார்களே, அவையெல்லாம் #கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்தது இல்லையா?
சுமேரியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்தவர்கள் குடியேறிய முதல் இடம் #கேரளக் கடற்கரைப் பகுதியா?
ஆசிய கண்டத்தில் அதிகமாக காணப்படும் #ஓநாய் வகைகளில் ஒன்றான #இரானிய_ஓநாய் எவ்வாறு ஆசிய நாடுகளில் பரவிக் காணப்பட்டது? அது எங்கிருந்து? எப்படி? எப்போது புறப்பட்டு இருக்கும்? இல்லை யார் அங்கிருந்து அழைத்து சென்றிருப்பார்கள்?
சுமேரியர்களின் புனித நூலாக கருதப்படுகிறது #கில்காமெஷ் காவியம். கில்காமெஷ் என்றால் சுமேரியர்களின் தலைவனா?, அரசாண்ட மன்னனா?, இல்லை கடவுளின் பெயரா?
#கிரீட் தீவில் (கிரேக்க நாட்டுக்கு கீழே மூன்று கண்டங்களும், ஐந்து கடல்களாலும் சூழப்பட்ட ஒரு குட்டி தீவு) வணங்கியது #முருகக் கடவுளையா? அவ்வாறு எனில், இங்கு காணப்படும் முருகக் கடவுள் என்பது?
#சிந்துவெளி மக்கள் பேசிய மொழி #தமிழ் தானா?
#திராவிடர்கள் தான் #ஆரியர்களா?, #ஆரியர் என்றால் செல்பவன், திரிபவன் என்று பொருள்படுகிறதே, ஆரியர்கள்தான் #வேதங்களை உருவாக்கினார்கள் என்று கூறப்படுகிறதே? அது எவ்வாறு உருவாகி இருக்கும்?
சுமேரியர்கள் தான் #தமிழர்களாக உருவெடுத்தாரர்களா? #தமிழ், #தமிழ்நாடு, #தென்மதுரை, #கபாடபுரம், #மதுரை போன்ற வார்த்தைகள் எல்லாம் தமிழா? இவர்கள் பேசியது தமிழ்தான் என்று எப்படி உறுதிப்படுத்தினார்கள்?
என்பது போன்ற பலநூறு கேள்விகளுக்கும், பலநூறு விவாதத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும் வரலாற்று ஆய்வு புத்தகம்தான் பா.பிரபாகரன் அவர்கள் எழுதிய “#குமரிக்கண்டமா_சுமேரியமா? தமிழரின் தோற்றமும் பரவலும்” என்ற புத்தகம்.
வரலாற்றில் இன்னும் இன்றும் சொல்லாத பல செய்திகளைச் சொல்ல சொல்ல நம் கண்கள் விரியும்.. அறிவினை விரியவும் செய்யும்…
வாசியுங்கள் நண்பர்களே….
நூலின் பெயர்: “குமரிக்கண்டமா சுமேரியமா?” தமிழரின் தோற்றமும் பரவலும்
ஆசிரியர்: பா.பிரபாகரன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்