மிகையின் தூரிகை
பாவண்ணன் சிறுகதைகளில் புராணம், இதிகாசம் அல்லது வரலாறு தொடர்பான புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆண்டாள் பற்றிய புனைவான ’புதிர்’ ஒரு தந்தையின் மனநிலையையும், ஒரு பருவப் பெண்ணின் மனநிலையையும் எழுப்பி நம்மைப் பரவசப்படுத்துகிறது. ‘இன்னும் ஒரு கணம்’ வாசித்தபோது விரிந்த விழிகள் மூடவே இல்லை. ஒரு பெண் தன்னை ஏற்க வேண்டும் என ஓர் ஆணின் மனம் தவிப்பதை மிக அழகாகச் சித்தரித்திருந்த விதம் கண்டு ஆச்சரியப்பட்டேன்; வாசித்தலின் ஆவல் எனக்குள் பெருகுவதையும் உணர்ந்தேன். இப்படி இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையின் காட்சிச் சித்தரிப்புகள் கண்டு பரவசம் கொண்டிருக்கிறேன்.
– எஸ்.ஜெயஸ்ரீ
Reviews
There are no reviews yet.