NAAM PERAVENDIYA MAATRAM
நாம் பெறவேண்டிய மாற்றம்
‘நாம் பெறவேண்டிய மாற்றம்’ என்ற இம்மொழி பெயர்ப்பின் மூல நூல். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள ‘The Urgency of Change’ என்பதாகும். ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் சிறிது காலம் தங்கியிருந்த இசைக்கலைஞர் ஆலன்நாடே (Alain Naude) வினவிய ஆழமான வாழ்வியல் வினாக்களுக்கு கிருஷ்ணமூர்த்தி அளித்த அற்புதமான விடைகளே இப்புதகத்தின் உட்பொதிவாக அமைந்துள்ளது.
நேர்காணலுக்குப்பிறகு, ஆலன்நாடே, தான் கேட்ட கேள்விகளையும் கிருஷ்ணமூர்த்தியின் பதில்களையும் நினைவுபடுத்தி எழுதிக்கொண்டு, பிறகு, அதை ஒலிநாடாவில் பதிவு செய்து, திருத்தம் ஏதாவது செய்ய வேண்டியிருப்பின், அதை செய்ய, மாலையில் ஒலிநாடாவை கிருஷ்ணமூர்த்திக்கு போட்டுக் காட்டி, திருத்தம் செய்வாராம். ஆக, கிருஷ்ணமூர்த்தியின் கவனத்திற்கு வந்த தனிச்சிறப்பைப் பெற்றது இந்நூல். மானுட வாழ்வின் பிரச்சினைகள் அனைத்தையும் ஆராய்வதோடு, கிருஷ்ணமூர்த்தியின் ஆழ்ந்த நோக்கினையும், இந்நூல் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

பிரபல கொலை வழக்குகள்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2) 
Reviews
There are no reviews yet.