NILAA PAARTHAL
நண்பனின் அறையிலிருந்து
திரும்பும் போது ஏற்பட்ட
திடீர் வெறுமையில்,
நிச்சயமற்ற தெருக்களில்
நீண்டநேரம் நடந்து
வீட்டைத் தொடுகையில்
பூட்டிய கதவை
நிலவும் தட்டியது.
மின்வெட்டில் விசிறி
சுழற்சியை நிறுத்த
காற்றைத் தேடி
இருட்டுக்குள் துளாவி
கைப்பிடிச் சுவரில்
முகம் பதித்த போது
நிலா வீசியது
சில நட்சத்திரங்களை.
தானாக இப்படித்
தட்டுப்பட்டது தவிர
நிலாப் பார்க்க என்றுபோய்
நிலா பார்த்து நாளாயிற்று.

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1 
Reviews
There are no reviews yet.