1 review for ஒரு சிறு இசை
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹160.00 Original price was: ₹160.00.₹150.00Current price is: ₹150.00.
சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிலசமயம் மழைக்குப்பிந்தைய இளவெயிலாக காற்று விரிந்து கிடப்பதை நாம் காண நேர்வதுண்டு. சிலசமயம் இருளில் நாம் ஆழ்ந்த தனிமையுடன் துயருடன் இருக்கையில் நம்முடன் மிக அந்தரங்கமாக காற்றும் இருப்பதுண்டு. இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் கதைகள். எழுபதுகளில் எழுதவந்தவர். தமிழில் அவருக்கு ஒரு முன்னோடி மரபு உண்டு. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் என ஒரு மரபு. ஒளிவிடும் ஓடை என மொழி வழிந்தோடும் தடம் என கதையின் வடிவத்தை அமைத்துக்கொண்டவர்கள் இவர்கள். ஓடை தடம் மாறுவதேயில்லை. காதலியின் முத்தம் போலவோ நூற்றுக்கிழவியின் ஆசி போலவோ எங்கோ சென்று தைப்பவை. வண்ணதாசனின் சிறுகதைகள் தமிழ் சேர்த்துக்கொண்ட செல்வம்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Poonkodibalamurugan –
புத்தகம் : ஒரு சிறு இசை
ஆசிரியர் : வண்ணதாசன்.
ரஷ்யக்கதைகள் போன்று நிலமும் , புறச்சூலும் மனிதர்கள் மீது செலுத்துகின்ற ஆளுமையை தன் ஒவ்வொரு கதைகளிலும் வண்ணதாசன் பதிவு செய்திருப்பார். வண்ணதாசனின் கதைகளை ஆன்டன் செகாவின் சிறுகதைகளுக்கு ஒப்பிட்டு எஸ்.ரா அவர்கள் சொல்லியிருப்பார். செகாவின் கதைப் பெண்கள் மிக அழகிகள். ஆனால் அடிமனதில் துயரம் கொண்டவர்கள் . காதலுக்காக தன்னை அழித்துக் கொள்பவர்கள். அதே போல் வண்ணதாசனின் கதைகளிலும் அதிகம் இடம்பெறுபவர்கள் பெண்களே. தங்களது இயல்பான உணரச்சிகளை வெளிப்படுத்திக்கொள்வதில் உள்ள தடைகளை அறிந்து இருக்கிறார்கள். பிரியமானவர்கள் பொருட்டு கஷ்டங்களைத் தாங்கிக் கொள்கிறார்கள். பிரகாசிக்கும் அன்புதான் அவர்களின் பொதுகுணம். அந்த அன்பின் பொருட்டு அவர்கள் தாங்கும் வலி மிகப் பெரியது.
அப்படியான 15 சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டு வெளிவந்த நூல்தான் ஒரு சிறு இசை.
எண்கள் தேவையற்ற உரையாடல்கள் :
ரொம்ப அருமையான சிறுகதை. ஜான்சி என்ற நடுத்தர வயதுப் பெண் ஒரு திருமணத்திற்கு செல்வதற்காக ரயில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார்.ஒரு செய்திதாளில் இறந்தவரின் புகைப்படத்துடன் வந்திருக்கும் இரங்கல் செய்தியைப் பார்த்தும் ஏசப்பா என்று கதறி விடுகிறார்.ரொம்ப தெரிந்தவரா என்ற பக்கத்தில் இருப்பவர் கேட்கும் போது அதையும் விட என்று மனதில் சொல்லிக் கொள்கிறாள் என்கிற போதே இறந்த அந்த சோமுவிற்கும், ஜான்சிக்கும் இடையே இருந்த மெல்லிய சிறு இசையை போன்ற உறவு நமக்கு புலப்படுகிறது. துக்க வீட்டிற்கு செல்கிறாள். பல வருடங்களுக்கு பிறகு சென்றாலும் அந்த வீட்டின் அடையாளம் மனதிற்குள் வரைபடமாய் இருக்கிறது. இருவரும் ஒன்றாய் வேலை பார்த்தவர்கள். ஜான்சி அசோகன் என்ற நபரை காதலித்து தோல்வி கண்டு அவனை மறக்க முடியாமல் திருமணத்தை மறுத்துக்கொண்டே வருகிறாள். யாருடைய பேச்சையும் செவிமடுக்கவில்லை. அலுவலகத்தில் இருக்கும் சோமு என்ற ஒரு மனிதரின் நட்பும் மென்மையான அணுகுமுறைகளும் வாழ்க்கையைப் பற்றி அவளுள் ஒரு இச்சையை தோற்றுவிக்கிறது. திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். திருமணப்பத்திரிக்கையை தரும் சமயத்தில் அவளையும் அறியாமல் அவருக்கு ஒரு முத்தம் தந்து விடுகிறாள். அவளின் எந்த கோட்டையும் தாண்ட விரும்பாத அதீத அன்பு தெரிகிறது. திருமணத்தில் சோமு கலந்து கொள்ளும் போது கடைசியாக பார்த்தது ..அதற்குப் பிறகு சவப்பெட்டியில் அமைதியாய் நீள் உறக்கம் கொள்ளும் போதுதான் பார்க்கிறாள். அப்போது அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் வர சோமு சார் என்ற கதறலில் அவளை வெளிப்படுத்துகிறாள். அதுவரை சேமித்து வைக்காத அவரது தொலைபேசிஎண்ணை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறாள். உரையாடல்களே இன்றிப் போகும் அந்த எண் அவருடனான நினைவுகளை மீட்டெடுக்க போதுமானதாய் ஜான்சிக்கு இருக்கும் போலும்.
ஒரு சிறு இசை :-
மூக்கம்மா ஆச்சிதான் கதை நாயகி..மூக்கம்மா ஆச்சியும் கதைசொல்லியின் ஆச்சியும் உடம்பிறந்தவங்க. பதினாறு வயதில் திருமணம் ஆகி ஒரு வாரத்திலேயே கணவனை பாம்புக்கடிக்கு பலிகொடுத்திட்டு திரும்ப தாய் வீடு வந்தர்றாங்க. அப்ப இருந்து அதிகம் அவங்க வந்து போற வீடு அக்கா வீடுதான். அக்கா புள்ளைகளைத்தான் சொந்த புள்ளைகள பாத்துட்டு வந்தாங்க. ஒரு முறை இங்க வரும் போது மூக்கம்மா ஆச்சி இறந்து போய்விடறாங்க. ஆச்சியோட நினைவலைகளை அசைபோட்டுட்டே இறுதிச்சடங்கு நடைபெறுவதுதான் கதை. மூக்கம்மா ஆச்சிக்கு தன்னை நிமிர்ந்து கூடாத அக்கா கணவனை பார்க்கும் போது மனசெல்லாம் என்னமோ பண்ணும். ஒரு முறை அவரோட சந்தனக்கலர் சட்டையை எடுத்து முகர்ந்து பாத்துட்டு இருப்பாங்க..அதைப்பார்த்த அவங்க அக்கா அடியே என்னை வாழ்க்கையை கெடுக்க பாக்கறியேன்னு அழுகாம இந்த சின்ன வயசுல உன் ஆசையெல்லாம் அடக்கிட்டு இப்படி கெடைக்கறியேனனு கதர்றாங்க. கடைசியில் ஆச்சியோடு போட்டோவைத் தேடி அவரது பெட்டியைத் திறக்கும் போது அந்த சந்தனச்சட்டையுடன் சேர்ந்து கோர்க்கப்பட்டு இருந்த மூக்கம்மா ஆச்சியோட போட்டோ பல கதைகளை அந்த பேரனுக்கு சொல்லுது..ஒரு சிறு இசையின் மெல்லிய அதிர்வென்று நமக்கும் கடத்தப்படுகிறது.
இப்படி பதினைந்து கதைகளும் பெண்களின் வெளிப்படுத்தாத , வெளிப்படுத்த முடியாத , தண்டவாளங்களைத் தாண்டாத அன்பைச் சொல்கிறது. வண்ணதாசனின் ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் மீட்டப்படாத ஒரு சிறு இசை நம் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்..