1 review for பொண்டாட்டி
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹4,640.00
Subtotal: ₹4,640.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹400.00 Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
அராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக நுழைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Kathir Rath –
பொண்டாட்டி
அராத்துக்கு தனியா அறிமுகம் தேவையில்லை. சாருவோட சீடர்கள்ல முக்கியமானவர்
இந்த வருடம் சென்னை புத்தக திருவிழால அதிகமாக விற்பனை ஆன நூல்கள்ல இது முக்கியமானதுன்னு சொன்னதால எடுத்து வாசிச்சேன். இதுக்கு முன்னமே எனக்கு அராத்துவோட தற்கொலை குறுங்கதைகள் முகநூல்ல வரப்பயே பிடிக்கும்.
ஆரம்பிச்சதுமே பிடிச்சு போச்சு. எல்லாரும் நினைக்கற மாதிரி பெண்கள் உடனான சம்போகத்தை பத்தி சொல்றதால இல்லை. பெண்கள் ஆண்களால என்னவா நடத்தப்படறாங்கன்னு நேர்மையா சொல்லிருக்கு
எடுத்ததும் ஒரு கேரக்டர் வரும். அது அடுத்தவன் மனைவியை கரெக்ட் பண்ணும். ஆனா பெருசா உறவு வச்சுக்காது. சும்மா அவ வீட்டுக்கு போயிட்டு மட்டும் வரும். காதல்லாம் கிடையாது. ஒரு கெத்துக்காக பன்றது. இதுல என்ன கெத்துங்கறிங்களா?
எங்க ஊர்ல ஒருத்தர் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பார். சரியா வட்டி கட்டலைன்னா அந்த வீட்டு பொம்பளை கூட இருக்க முயற்சிப்பார். இது ஊருக்கே தெரிஞ்ச விசயம். இதை பத்தி என் பிரண்டுகிட்ட கேட்டப்ப சிரிச்சான். ஏன்டான்னா அவனால எதுவுமே முடியாதாம்டான்னான். உனக்கு எப்படிடா தெரியும்னு கேட்டதுக்கு அவன் பொண்டாட்டிதான்டா சொன்னான்னு வெக்கப்பட்டான்.
அப்புறம் எதுக்கு இந்த மாதிரி ஆளுங்க கைக்காச செலவு பண்ணி வப்பாட்டி வச்சுருக்கறன்னு காட்டிக்கனும்? ஏன்னா இங்கே, இந்த சமுதாயத்துல அதுவும் கெத்தான விசயமாதான் பார்க்கப்படுது.
அதே மாதிரி ஒரு பொண்ணு புருசனுக்கு துரோகம் பண்ணனும்னா அவ புருசன் கெட்டவனா மோசமானவனா இருந்தாதான்னுலாம் இல்லை, அவங்கிட்ட மிஸ் ஆகற ஏதோ ஒரு சின்ன விசயம் வேற யார்கிட்ட இருக்கோ அவங்கூட உறவாட பெருசா தயங்க மாட்டாங்கங்கறத சொல்ற மாதிரி ஒரு ஜோடி
கதைன்னு பார்த்திங்கன்னா உண்மையான காதலுக்கு ஏங்கற தீப்திங்கற வெர்ஜின் பொண்ணு வாழ்க்கைல வர மூணு ஆம்பளைங்களை பத்திதான்.
ரொம்ப துள்ளலான நக்கலான எழுத்து நடை, எப்படின்னா ரோட்டோரமா நின்னுக்கிட்டு வேகமாக போற பசங்களை பார்த்து இப்ப கீழே விழுந்து கைய உடைச்சுக்குவான் பாருன்னு சொல்ற மாதிரி ஒரு கேரக்டர் பத்தி சொல்லிட்டு இருக்கப்ப டக்குன்னு எதிர்காலத்துக்கு ஜம்ப் பண்ணி இவ கல்யாணம் பண்ணி புருசனுக்கு துரோகம் பண்ண போறான்னு உடைக்கறது.
நடுநடுவுல அராத்தாவே வந்துட்டு போறது
குறிப்பாக அந்த 3 ஆண்களுக்கான பெயர் தேர்வு
ஜெயமோகன்
எஸ்.ராமகிருஷ்ணன்
சாரு நிவேதிதா
தமிழ்ல இன்னைக்கு முக்கியமான மூணு எழுத்தாளர்களை பொண்ணை ஏமாத்தற கதாபாத்திரங்களா காட்டறதுக்கு என்ன மாதிரி தைரியம் வேணும்? இதுக்கு ஜெமோவோட வாசகர் வட்ட இளவரசி வெண்பாதான் புருஃப் பார்த்ததுன்னு வேற போட்டுருந்தாங்க, எனக்கு ரொம்ப ஆச்சர்யம்.
சாரு இதை படிச்சுட்டு ரொம்ப ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கிட்டதோட நான் இப்படித்தான் ஏமாத்துவேன்னு ஒத்துக்கிட்டார். அவர்தான் இந்த புத்தகத்தை வெளியிட்டார்.
அதுலயும் புத்தகத்துல சாருவோட மனைவி ஒரு வசனம் பேசறாப்ல இருக்கும்
“என்னையும் ஒருத்தன் லவ் பண்ணான். இப்பவரை கல்யாணம் பண்ணாம இருக்கான். அவன் பேர் ராம். நான் அவங்கூட இருந்துக்கறேன்”
எப்படி 96 படத்தை கொண்டு வந்து சொருகிருக்காங்க பாருங்க…
இந்த புத்தகத்துல அடிமட்டத்துல இருந்து ஹைகிளாஸ் வரை, பெண்கள் ஆண்களால் எப்படி வஞ்சிக்கபடறாங்கங்கறத ரொம்ப நேரடியா சொல்லிருக்காங்க. அது 100% யதார்த்தம்தான். இது எல்லாமே நானே கேள்விப்பட்ட உண்மைகள். சில இடத்துல எனக்குள்ளும் குற்ற உணர்ச்சிய தூண்டுச்சு.
பெண்கள் அன்பையும் காதலையும் நேர்மையும் மட்டும்தான் ஆண்கள்கிட்ட எதிர்பாக்கறாங்க. ஆனா மத்த ரெண்ட கொடுத்தாலும் இந்த நேர்மைய மட்டும் கொடுக்கவே ஆண்களுக்கு மனசு வராது.
உன்னை காதலிக்க வைக்கறதுக்காகத்தான் நீ எனக்கு கிடைக்கனுங்கறதுக்காகத்தான் இந்த பொய் சொன்னேன்னு சொல்லி சமாளிக்காத காதலன் யாராவது இருக்கிங்களா? இருந்தா கடைசியா பார்த்து வச்சுக்கனும். கடைசி தலைமுறை இவங்களாம்.
கண்டிப்பா எல்லாரும் படிக்கனும். குறிப்பாக பெண்கள் அதுவும் சமூக வலைதளங்கள்ல இருக்க பெண்கள் கட்டாயம் படிக்கனும்.