1 review for புகார் நகரத்துப் பெருவணிகன்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
அக்கிரகாரத்தில் பெரியார்						
															4 × ₹275.00				
கனம் கோர்ட்டாரே!						
															1 × ₹275.00				
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை						
															4 × ₹125.00				
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்						
															3 × ₹200.00				
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report						
															1 × ₹200.00				
நான் நாகேஷ்						
															2 × ₹240.00				
பிரபல கொலை வழக்குகள்						
															5 × ₹220.00				
கொடூரக் கொலை வழக்குகள்						
															2 × ₹175.00				
90களின் தமிழ் சினிமா						
															1 × ₹120.00				
ஆசைக்கவிதைகள்						
															1 × ₹160.00				
சஞ்சாரம்						
															1 × ₹440.00				
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)						
															6 × ₹460.00				
ரம்பையும் நாச்சியாரும்						
															2 × ₹100.00				
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1						
															2 × ₹450.00				
வருங்கால தமிழகம் யாருக்கு?						
															3 × ₹170.00				
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2						
															3 × ₹320.00				
தாமஸ் வந்தார்						
															4 × ₹200.00				
தெற்கிலிருந்து ஒரு சூரியன்						
															2 × ₹285.00				
எலான் மஸ்க்						
															1 × ₹155.00				
ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை (1927, மார்ச்)						
															1 × ₹50.00				
மனவெளியில் காதல் பலரூபம்						
															1 × ₹140.00				
கருஞ்சூரியன்						
															1 × ₹80.00				
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்						
															1 × ₹175.00				
ரோலக்ஸ் வாட்ச்						
															1 × ₹200.00				
நளினி ஜமீலா						
															1 × ₹215.00				
மாபெரும் தமிழ்க் கனவு						
															2 × ₹470.00				
சோழன் ராஜா ப்ராப்தி						
															1 × ₹140.00				
கலைஞர் எனும் கருணாநிதி						
															1 × ₹250.00				Subtotal: ₹14,370.00
அக்கிரகாரத்தில் பெரியார்						
															4 × ₹275.00				
கனம் கோர்ட்டாரே!						
															1 × ₹275.00				
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை						
															4 × ₹125.00				
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்						
															3 × ₹200.00				
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report						
															1 × ₹200.00				
நான் நாகேஷ்						
															2 × ₹240.00				
பிரபல கொலை வழக்குகள்						
															5 × ₹220.00				
கொடூரக் கொலை வழக்குகள்						
															2 × ₹175.00				
90களின் தமிழ் சினிமா						
															1 × ₹120.00				
ஆசைக்கவிதைகள்						
															1 × ₹160.00				
சஞ்சாரம்						
															1 × ₹440.00				
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)						
															6 × ₹460.00				
ரம்பையும் நாச்சியாரும்						
															2 × ₹100.00				
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1						
															2 × ₹450.00				
வருங்கால தமிழகம் யாருக்கு?						
															3 × ₹170.00				
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2						
															3 × ₹320.00				
தாமஸ் வந்தார்						
															4 × ₹200.00				
தெற்கிலிருந்து ஒரு சூரியன்						
															2 × ₹285.00				
எலான் மஸ்க்						
															1 × ₹155.00				
ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை (1927, மார்ச்)						
															1 × ₹50.00				
மனவெளியில் காதல் பலரூபம்						
															1 × ₹140.00				
கருஞ்சூரியன்						
															1 × ₹80.00				
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்						
															1 × ₹175.00				
ரோலக்ஸ் வாட்ச்						
															1 × ₹200.00				
நளினி ஜமீலா						
															1 × ₹215.00				
மாபெரும் தமிழ்க் கனவு						
															2 × ₹470.00				
சோழன் ராஜா ப்ராப்தி						
															1 × ₹140.00				
கலைஞர் எனும் கருணாநிதி						
															1 × ₹250.00				Subtotal: ₹14,370.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
  ₹400.00 Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதை. அன்றைய தமிழர்கள் எந்த அளவுக்கு உயர்ந்திருந்தனர், எந்த அளவுக்குச் சிந்தித்தனர் என்பதை ஆவணப்படுத்தும் நாவல். இதில் வரும் பல்வேறுபட்ட விவரங்களை நம்மால் கலைக் களஞ்சியத்தில் கூடப் பார்க்கமுடியாது. நாவலாசிரியர் பிரபாகரன் இந்த நோக்கில் யாரும் தொடமுடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறார். நம் பழமையையும் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் கதை இது. இதில் மன்னர்கள் வருகிறார்கள் என்றாலும் கதை அவர்களைப் பற்றியது அல்ல. எளிய மனிதர்களே இதில் அசாதாரணமான கதாநாயகர்களாகவும் நாயகிகளாகவும் வெளிப்படுகிறார்கள். அவர்களுடைய சாமானியன வாழ்க்கை அனுபவங்களைத்தான் நாவல் சொல்கிறது. என்றாலும், இதிலிருந்து ஓர் அற்புதமான மானுட தரிசனத்தை நாம் பெறமுடியும்.தமிழர்கள் உலகளவில் எப்படிப் பயணம் செய்தனர், எப்படிப்பட்ட கப்பல்களைக் கட்டினர், எப்படித் தங்களை அலங்காரம் செய்துகொண்டனர், எப்படி உரையாடினர், எப்படிப்பட்ட படைக்கலன்களைப் பயன்படுத்தினர், எத்தகைய இசைக் கருவிகளைக் கையாண்டனர், அவர்களுடைய இல்லங்களும் வீதிகளும் கடைத் தெருக்களும் எப்படி அமைந்திருந்தன என அனைத்தும் வெறும் தகவல்களாக அன்றி, கதையோடு ஒன்றுகலந்து அசரடிக்கின்றன. ‘குமரிக்கண்டமா சுமேரியமா?’ என்னும் புகழ்பெற்ற நூலை எழுதிய பா. பிரபாகரனின் இந்த முதல் நாவலை ஒரு பொக்கிஷம் போல் தமிழுலகம் பாதுகாக்கப்போவது உறுதி.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
அனைத்தும் / General
அனைத்தும் / General
Ranjani basu –
நூல் அறிமுகம்
புகார் நகரத்துப் பெருவணிகன்
ஆசிரியர் பா.பிரபாகரன்
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.400/-
“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும் (புறம் – 6)
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை காரிகிழார் பாடிய பாடல் இது.
தமிழரின் வரலாறை இலக்கியத்தின் வழி அறிவதற்கு காலத்தால் மிக மூத்த பதிவாக இதை சொல்லலாம். புவியியல் எல்லைகள் குறித்த வரையறை அந்தக் காலகட்டத்தில் பயணித்தவர்களின் அறிவை மட்டுமல்ல, ஆளுகை செலுத்தியவர்களின் ஆட்சியின் விரிவைக் கூறுபவை. புறநானூற்றுப் பாடலின் வழி சில தகவல்களைத் தெரிந்து கொள்வது நமக்கு பழந்தமிழர் வாழ்வை நோக்கி சில அடிகள் எடுத்து வைப்பதைப் போன்ற உணர்வை அளிக்கிறது. வரலாற்று நாவல்கள் காட்டும் பழந்தமிழர் வாழ்வு நம்மை கால எந்திரத்தில் பயணிக்க வைக்கிறது.
பிரபாகரன் அவர்கள் எழுதிய புகார் நகரத்துப் பெருவணிகன், பழந்தமிழரின் வணிகத்தை குறிப்பாக சோழ தேசத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. நூலாசிரியர் குமரிக்கண்டமா சுமேரியமா? என்ற ஆய்வு நூலின் வழி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர். வணிகம் குறித்த இலக்கியக் குறிப்புகளைத் தேடிப்போனால், கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பட்டினப்பாலை முக்கியமான சான்றுகளைத் தருகிறது.
நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூம் மிகைகொளா கொடுப்பதூம் குறைகொடாது
. . . . . . . . . . . . . மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்துஇனி துறையும்
-பட்டினப்பாலை(வரிகள்: 206-217)
“உழவர்களின், நீண்ட நுகத்தடியின் நடு போல, நடுவுநிலைமை தவறாத மனம் உடையவர்களாகவும், பழி அஞ்சி பொய்பேசாது மெய்யேபேசி, தம்மையும் பிறரையும், ஒன்றாக மதிப்பவர்களாகவும் இருப்பவர்கள் புகார் வணிகர்கள். தம்முடைய பொருட்களையும், பிறருடைய பொருட்களையும் ஒன்றாக மதிப்பவர் களாகவும் வாங்குகிறபோது அதிக அளவாக வாங்காமலும், கொடுக்கிறபோது குறைந்த அளவாகக் கொடுக்காமலும், பல பொருட்களையும் நியாயமான விலை கூறி விற்கின்றவர்கள் புகார் வணிகர்கள்.
இந்தக் கவிதை வரிகளை அறிமுகமாகக் கொண்டு, புகார் நகரத்துப் பெருவணிகனை வாசிக்கத் துவங்கலாம். முன்னுரையிலேயே “இது பழம்பெருமை பேசும் கதை அல்ல. நசித்த பழம்பெருமையை உரமாக்கி புதிய பெருமையைப் படைக்கத் தூண்டும் கதை” என்று ஆவலைத் தூண்டுகிறார் ஆசிரியர். சோழ நாட்டு சிற்றூர் ஒன்றில் பிறந்து, வளர்ந்து கனவில் கடல்வணிகத்தை சுமந்து திரியும் செம்பியன் எனும் இளைஞனின் வாழ்க்கையின் வழி, வாசகரும் பழந்தமிழர் வாழ்வியல், வணிகம், அரசியல் என அனைத்தையும் கவனிக்க முடிகிறது. துவக்க நிலை ஆர்வத்தில் அபாயத்தில் நுழைந்து, அதில் இருந்து வெளியேறுகையில் உற்ற நண்பனை இழக்க நேரிடும் பெருந்துயர். காலமெல்லாம் செம்பியன் மனதை ரணமாக்குகிற சம்பவம். புதினத்துள் நுழைய நுழைய புதிர் சம்பவங்களும், திகில் நிறைந்த காட்சிகளும் அடுக்கடுக்காக விரிகின்றன. உயிரின் மீதான பிடிப்பு தான் மானுட குலத்தையே வழிநடத்துகிறது. வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற, நமக்கு அனுபவச் சொற்களின் வெளிச்சம் தேவைப்படுகிறது.
செம்பியனிடம் மூலனின் தந்தை கூறுகிறார் // எதிரியைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து கொள். அவனது விருப்பு, வெறுப்பு, பலம், பலவீனம், நட்பு, பகை என அனைத்தையும் அறிந்து கொள். தன்னையும் அறிந்து எதிரியையும் அறிந்தவனே முழு வெற்றி அடைகிறான்.// இது எல்லாக் காலத்திலும் பொருத்தப்பாடு உடையது தானே. வெறியாடலின் விவரிப்புகள் நிகழ்த்துக்கலையின் அழகான சித்திரம்.
புதினம் முழுவதிலும் விவரிக்கப்படும் வணிகத்தின் வலைப்பின்னலும், சிறு தவறும் நிகழாத அதன் பிழையில்லா நிர்வாகமும் நினைக்க நினைக்க பிரமிப்படையச் செய்கின்றன. எந்த ஒரு அரசும் வணிகத்தின் உறுதியான ஆதரவில் தான் தொய்வின்றி இயங்க முடியும். அரசன் வணிகர்களோடு கொள்ளும் நல்லுறவு, வணிகத்தின் ஊடே நிகழ்த்தப்படும் அரசியல் பகடையாட்டம் இவற்றை எல்லாம் பிரபாகரன் மிக விரிவாகவும், சுவாரஸ்யமாகவும் புதினத்தில் விவரிக்கிறார். கடல் பயணத்தின் நுணுக்கங்கள், ஒரு அறிவியல் துறையாக அதன் விரிவு, தெளிவுறக்கற்பதிலும், தேர்ந்த அறிவாளர்களாகத் திகழ்வதிலும் பழந்தமிழர் காட்டிய அளப்பரிய ஆர்வம் என எல்லாமே பிரபாகரன் அவர்களின் சொற்களில் நம் கண் முன் உயிர்ப்புடன் விரிகிறது.
விளக்குகளின் வகைகள், அணிகலன் களின் வகைகள், எண்ணிக்கையின் அரிச்சுவடி, கலங்களின் வகைப்பாடு, காற்றின் பெயர்கள், நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்கள், விருந்தில் இடம்பெறும் உணவு வகைகள் என புதினம் முழுவதிலும் புதிய புதிய தகவல்களை வாசகர்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஆசிரியர். சீன வணிகத்தின் பயணம் நாவலின் இரண்டாம் பகுதி என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் ஓரளவு வணிகம் பற்றியும், கடற்பயணம் பற்றியும் தெரிந்து கொண்டதால், நாவலின் வேகத்துக்கு வாசகரும் பயணிக்க முடிகிறது. சோழ தேசம் என்றாலும், கலிங்கம் என்றாலும், சீனம் என்றாலும் அரசியல் கணக்குகளும், காதலும், மனித நேயமும் உலகளாவிய பண்புகள் தான் என்பதையும் இப்புதினம் அழுத்தமாய் சொல்கிறது. பட்டறிவு ஆண்டுகளால் மட்டும் வருவதில்லை என்பது ஒரு அத்தியாயத்தின் தலைப்பாக வருகிறது. எத்தனை மகத்தான வாழ்வியல் உண்மை..சீன வணிகத்துக்கான தயாரிப்பு பணிகளை, வணிகவியல் ,மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்.
நித்திலா, போதிஷிரி, ஷின்யூ என மூன்று பெண்களும் அவரவர் வாழ்வின் எல்லைகளுக்குள் தங்கள் காதலைச் சொல்கின்றனர். நித்திலாவுக்கு கைகூடவில்லை. மற்ற இருவருக்கும் மனம் தேர்ந்த வாழ்வு. செம்பியனின் மனம் விரும்பிய கடற்பயணம் அவனுக்கு பயண நுணுக்கங்களை மட்டுமல்ல, வாழ்வியல் நுணுக்கங்களையும் கற்றுத் தருகிறது.
வெறும் பழந்தமிழர் குறித்த தகவல்களைக் கொட்டி நிரப்பாமல், அவற்றை வண்ணப்பூக்களால் ஆன மாலையாகத் தொடுத்திருக்கும் அற்புதமான பணியை பிரபாகரன் செய்திருக்கிறார். சுவாரஸ்யமான வரலாற்றுப் புதினம். அழகிய வாசிப்பனுபவம்.
*************************************************************************************************************************