Saayi
ஷீரடி பாபாவின் வாழ்க்கை மிகவும் ரகசியமானது. நிமிஷத்திற்கு நிமிஷம் வியப்பைக் கொடுக்கக்கூடியது. ஒரு பக்கம் இவர் பொறுமையையும் கடமையையும் போதித்தார். மறுபக்கம் மிகுந்த கோபத்தையும் காண்பிக்கிறார்.
சில சமயம் கீதையின் ரகசியத்தையும் அதன் பொருளையும் இனிமையாக மொழிபெயர்த்து சொல்கிறார். அவ்வப்போது பெரிய ஞானிகளும் புரிந்து கொள்ள முடியாத ரகசியங்களை போதிக்கிறார். சில சமயம் கடவுளாகத் தெரியும் இவரே, சாமானிய மக்களுடன் சாமானியனாகவே வாழ்கிறார். அவருடைய தோளில் தொங்கும் தூளியில் ‘குபேரன்’ வாசம் செய்தாலும், தினமும் பிட்சை எடுக்கத் தவறுவதில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் இவை ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் அதில் விஷயம் இருக்கிறது. போதனை இருக்கிறது. அதை பிடிவாதமான குழந்தையாகி அறிய முனையும்போது நம் சந்தேக முடிச்சுகள் எல்லாம் பாபாவின் கருணையால் அவிழ்கிறது.
‘சாயி’ சரிதத்தினால் பல பேரின் வாழ்க்கையில் சுகமும் அமைதியும் கிடைத்தது. பலரது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றினார் பாபா. இந்நூல் மராத்தி, கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மராத்தியில் மூன்று லட்சத்திற்கும் மேலான பிரதிகள் அச்சாகி இருக்கின்றன. ‘குங்குமம்’ இதழ் மூலம் தமிழாகி லட்சக்கணக்கான மக்கள் படித்த சரிதம், நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது.

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2						
Carry on, but remember!						
Reviews
There are no reviews yet.