Sikkalkal Theerkka Sidhdhargal Vazhikattum Aalayangal Part-2
சித்தர்கள் என்றாலே இன்றும் மனசுக்குள் ஒரு பிரமிப்பு தட்டுகிறது. இரும்பைப் பொன்னாக்குவது, கூடுவிட்டுக் கூடு பாய்வது, நவபாஷாணம் மற்றும் மூலிகைகளால் சிற்பங்கள் உருவாக்குவது, காற்றிலே கலந்து மறைந்திருப்பது, அமானுஷ்யக் குரலில் பேசுவது என்றெல்லாம் அடிப்படை உண்மைக்கு மேலே சித்தர்களைப் பற்றி உருவாகியிருக்கின்றன பல நம்பிக்கைக் கோட்டைகள். அந்த சித்தர்களை மனப்பூர்வமாக உணர்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது அவரவர் அனுபவம். அதனால் சித்தர்கள் மேல் அவர்கள் தனிப்பட்ட கருத்து கொள்ளவும் கூடும். அத்தகைய அனுபவம் இல்லாதவர்கள், சித்தர்களை விமரிசிக்கவும் கூடும். சித்து வேலைகள் செய்பவர்கள் என்று எல்லா சித்தர்களையும் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. அரூபமாக வந்து அற்புதங்களைப் புரியும் ஆனந்த சித்தர்கள் இன்னமும் நம் பூமியில் நிறைந்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் ஏற்கக்கூடியதே. பொதிகை, சதுரகிரி, அத்ரி, திருவண்ணாமலை முதலான மலைப்பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்த சாட்சிகள் நிறைய காணக்கிடைக்கின்றன. இறவா வரம் பெற்றவர்கள் என்று அனுமானிக்கப்படும் சித்தர்கள் இன்றளவும் புனித மலைகளிலும், கோயில்களிலும் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வலுத்திருக்கிறது.
அப்படி கோயிலில் நடமாடிக்கொண்டிருக்கும் அந்த சித்தர்கள், அந்தந்த கோயில்களைப் பற்றி, அவற்றின் புராதனப் பெருமை பற்றி, அங்கு உறையும் இறைவன்-இறைவி பற்றி தமக்கே உரிய நடையில் பாடல்களாக இயற்றி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாடல்களில், இப்படி கோயில் தன்மைகளை மட்டும் சொல்லாமல், அந்தந்தக் கோயில்களுக்குச் சென்றால் எந்தெந்த தளைகளிலிருந்து விடுபடலாம் என்றும் குறிப்பு கொடுத்திருக்கிறார்கள்.
தெய்வ நிலையில் வைத்துப் போற்றப்படும் அந்த சித்தர்கள் அவ்வாறு எழுதிவைத்திருக்கும் பாடல்களை, மிகப் பழமையான ஓலைச் சுவடிகளிலிருந்து பத்திரமாக எடுத்து நமக்களிக்கிறார், நாடி ஜோதிட நல்லுரைஞர் கே. சுப்பிரமணியம் அவர்கள். தினகரன் ஆன்மிக மலரில் தொடராக அவர் எழுதிய ‘சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள்’ கட்டுரைகளின் இரண்டாம் தொகுதி இது.
* கொல்லூர் மூகாம்பிகையை நவராத்திரியில் விரதம் இருந்து வணங்கினால் கல்வியில் வெற்றி நிச்சயம் என்கிறார் போகர்.
* வட சென்னை காளிகாம்பாளை எலுமிச்சை விளக்கு ஏற்றி தொழுதால், வராத கடனும் வந்துவிடும் என்கிறார் தாயுமானவர்.
* காளையார் கோயில் காளீஸ்வரனை பூஜித்து அன்ன தானம் செய்தால், வற்றாத செல்வ வளம் கிடைக்கும் என்கிறார் கொங்கணர்.
* கோவில்பட்டி பூவனநாதர் – செண்பகவல்லியை வழிபட்டால் மனம் போல மண வாழ்க்கை அமையும் என்கிறார் அகத்தியர்.
– இப்படி ஒவ்வொரு ஆலயத்திலும் பிரத்யேக வழிபாடுகளுக்கு பலன்கள் ஏராளம் கிடைக்கும். இந்தப் பலன்களைப் பெறும் வழிகளை சித்தர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்த ரகசியங்களைத் தேடி உங்களுக்குத் தருகிறது இந்த நூல்.

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி வரலாறும் வளர்ச்சியும்
உலகை ஆளும் மந்திரம்
காமாட்சி அந்தாதி
சிங்கப் பெண்ணே
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
கலாபன் கதை
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
தமிழ் வேள்வி
பொய்யும் வழுவும்
தமிழகத்தின் வருவாய்
திருமந்திரம் மூலம் முழுவதும்
பசலை ருசியறிதல்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
மரணத்தின் பின் மனிதர் நிலை
1958
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
சிறு புள் மனம்
சிலிர்ப்பு
ராமாயணம் எத்தனை ராமாயணம்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
சுகவாசிகள்
ராஜன் மகள்
தமிழ் நவீனமயமாக்கம்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
திண்ணைப் பேச்சு
கடலுக்கு அப்பால்
அறிந்ததினின்றும் விடுதலை
குறள் 100 மொழி 100
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
கூகை
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
ஆலிஸின் அற்புத உலகம்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
நாற்கரம்
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
தீண்டாமையை ஒழித்தது யார்?
தடை செய்யப்பட்ட புத்தகம்
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு
கரியோடன்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
இன்னா நாற்பது
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
நீர் அளைதல்
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
பார்த்திபன் கனவு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
கி.ராஜநாராயணன் கடிதங்கள்
அண்டசராசரம்
கலங்கிய நதி
கணிதமேதை இராமானுஜன்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
என்னைச் சந்திக்க கனவில் வராதே
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
ஆவி உலகம்
மொழிப் போராட்டம்
நரக மயமாக்கல்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
திருக்குறள் பரிமேலழகர் உரை
கயிறு (மூன்று பாகங்கள்)
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
வடசென்னைக்காரி
ததாகம்
மகாகவி பாரதியார் கட்டுரைகள் 


Reviews
There are no reviews yet.