SRIMATH BHAGAVATH GEETHAI
வியாஸ பகவான் இயற்றிய மகாபாரத காவியம் ஒரு லட்சம் சுலோகங்கள் நிறைந்தது. அதில், பீஷ்ம பருவத்தில் பகவான் கிருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் நடக்கும் சம்வாதமாக பகவத்கீதை இடம் பெறுகிறது. கண்ணன் போர்க்களத்தில் சொன்னவை அர்ச்சுனனுக்கு மட்டுமல்லாது , உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவர்க்கும் பொருந்தும். அப்படிப்பட்ட கீதையின் கருத்துகளை மிக எளிய தமிழில் விளக்கிக் கூறுகிறது .முதல் ஆறு அத்தியாயங்கள் கர்ம யோகத் தத்துவங்களையும் ஏழு முதல் பன்னிரெண்டுஅத்தியாயங்கள் பக்தி யோகத் தத்துவங்களையும் ,பதிமூன்று முதல் பதினெட்டு அத்தியாயங்களையும் ஞான யோகத்தையும் கூறுவதை மிக அருமையாக ஒவ்வொரு ஸ்லோகத்தின் வரிசை எண் குறித்து விளக்குவது, படிப்போருக்கு மிகவும் பயன்படும் .
‘தர்மம்’ இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சியம், என்று சஞ்சயனின் மங்களத்துடன் நூலை நிறைவு செய்வது புலமைக்குச் சான்று ஆகும் .பிரம்மவித்தை யோக சாஸ்திரம் என புகழ்பெறும் கீதைக்கு தற்போது எளிய தமிழில் ஒரு உரை விளக்கம் – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மேற்கோள்களூடன் ஆசிரியர் எழுதியுள்ளார்.இறுதியில் ,ரேவதி நட்சத்திரத்தின் கதையை அறிவியல் விளக்கத்துடன் கூறுவது வியக்க வைக்கிறது. பாதுகாக்க வேண்டிய நூல்.
– தினமலர்

The Mahabharata For Children						


Reviews
There are no reviews yet.