வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.
வலுவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியைத் தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். காவல்துறையினர், அரசு அதிகாரிகள், சிப்பாய்கள், வணிகர்கள், ஆன்மிக யாத்திரிகர்கள், சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித பாரபட்சமும் இன்றி ஆயிரக்கணக்கானவர்களைத் தக்கர்கள் கொன்றொழித்தனர். அவர்களுடைய உடைமைகள் மட்டுமல்ல சடலங்கள்கூட ஒருவருக்கும் கிடைக்கவில்லை.
சுருக்குக் கயிற்றை வீசியெறிந்து கழுத்தை முறித்துக் கொல்வது இவர்களுடைய வழக்கம். கவனமாகத் திட்டமிட்டு, துல்லியமான முறையில் ஒவ்வொரு கொலையையும் கொள்ளையையும் செய்து முடிப்பார்கள். இவையனைத்தையும் காளியின் பெயரால், அவருடைய வழிகாட்டுதலின்படிச் செய்வதாகவும் சொல்லிக்கொள்வார்கள்.
காளியின் மைந்தர்களைத் தண்டித்தால் என் ஆட்சியும் உயிரும் போய்விடும் என்று அஞ்சி முகத்தைத் திருப்பிக்கொண்ட மன்னர்கள் பலர் இருந்தார்கள். வில்லியம் ஸ்லீமன் என்னும் பிரிட்டிஷ் அதிகாரியின் வருகைக்குப் பிறகுதான் நிலைமை மாறத்தொடங்கியது. திறமை-யாகவும் துணிச்சலாகவும் ஒரு பெரும் வேட்டையைத் தொடங்கிய ஸ்லீமன் தக்கர்களைச் சிறிது சிறிதாக முடிவுக்குக் கொண்டுவந்தார்.
தக்கர்களின் வேட்டை, தக்கர்களை அழிப்பதற்கான வேட்டை இரண்டையும் முழுமையாகப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.
“இந்திய வரலாற்றில் மறந்துபோன ஒரு காலகட்டத்தை உயிர்ப்பித்துக் கொண்டுவந்திருக்கிறார் நூலாசிரியர். இந்தியாவின் கடந்த காலத்தைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.”
– டபிள்யூ.ஐ. தேவாரம், ஐபிஎஸ் – டிஜிபி (ஓய்வு)
arun kumar –
#தக்கர்_கொள்யைர்கள்
#இரா_வரதராசன்
#கோர்ட்டின் முன் ஒரு கொள்ளைக்கார தலைவன் பதிலளிக்கிறான் நீங்கள் எத்தனை மனிதர்களை கொன்று இருக்கிறீர்கள்.
இதுவரை 991 மனிதர்களை கொன்று குவித்து இருக்கிறேன் ஐயா.
நீங்கள் இத்தனை கொலைகள் செய்வதில் உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லையா குற்ற உணர்வு எதுவும் இல்லையா.
வேட்டைக்காரனுக்கு விலங்குகளை பார்த்தால் சந்தோசமே அந்த விலங்குகள் செத்து மடிவதை பார்க்கும் போது சந்தோஷம் தானே இதில் என்ன மன உளைச்சல் வந்துவிடப்போகிறது குற்ற உணர்வு வந்து விடப்போகிறது.
நீங்கள் உங்கள் காளிக்கு செய்யும் துரோகம் இல்லையா இதெல்லாம்..
காளி தெய்வமே எங்களை அதற்காக தான் அனுப்பி வைத்துள்ளார் காளியின் பிள்ளைகள் நாங்கள்…
இவ்வாறு செய்தால் தான் எங்களுக்கு சொர்க்கம் கிட்டும்.
இவ்வாறு அவன் சிரித்துக்கொண்டே பதில் தரும் அவன் தக்கர்கள் என்றழைக்கப்பட்ட சுருக்கு கயிறுரோடு திரியும் காளியின் பிள்ளைகள் இவர்கள்..
முதலாவதாக முஸ்லிம்கள் தக்கர்கள் ஆக இருந்து வந்துள்ளனர். ஆனாலும் இந்தியாவில் அவர்கள் காளியினை வழிபட்டுள்ளனர். காளிதேவி இவர்களிடம் எவ்வாறு வந்தடைந்தது என்பதற்கும் ஒரு வரலாறு கொடுத்துள்ளார்கள்..
ஒரு தெய்வத்தின் வருடத்திற்கு 30 ஆயிரம் கொலைகள் செய்து கொள்ளையடிக்கும் கும்பல்…
இவர்கள் செய்யும் கொலைகள் அவர்களைப் பொறுத்த அளவு அவர்களின் தெய்வம் கூறியவற்றை அவர்கள் செய்கிறார்கள்.எங்கள் காளிக்கு நாங்கள் செய்யும் கைமாறு அவர்களே எங்களை அனுப்பி உள்ளார். நாங்கள் இதனை செய்தால் மட்டுமே சந்தோசம்…
இந்த தக்கர் கும்பலில் இந்து-முஸ்லிம் மற்றும் பல குடிகளும் அமைந்துள்ளன இந்துவில் பெரும்பாலான அனைத்து ஜாதிகளிலும் தக்கர் இருந்து வந்துள்ளனர்.
அவர்களின் வரலாறு அச்சத்தை ஏற்படுத்தியது… ஆங்கிலேயர்களை இவர்கள் பல பெயர்களை தூக்கிலிட்டாலும் பல பேருக்கு ஒரு நல்ல வாழ்வினை அழித்து மக்களுடன் மக்களாக வாழ வழிவகை செய்து கொடுத்துள்ளனர்…
நன்றி..