வானமே வறண்டாலும்கூட கொல்லிமலையில் உள்ள அருவி வற்றுவது கிடையாது. அதனால்தானே அங்கு வழிவழியாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் இந்த அருவியை ‘ஆகாய கங்கை’ என்று கூறி வருகிறார்கள்.
திருக்கோவலூர் கோயிலிலுள்ள மூலவர் உளகளந்த பெருமாள். இந்த திருவுருவம் மற்ற கோயில்களில் இருப்பது போல கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் அல்ல; மரத்தால் ஆகியது. இதை அறியும்போது வியப்பாக உள்ளது அல்லவா?
திட்டமிட்டுச் செய்த பயணங்களை வைத்து எழுதப்பட்டவை அல்ல இந்நூலில் உள்ள கட்டுரைகள். சில பயணங்கள் திட்டமிடப்பட்டவை. கிடைத்த தகவல்களைத் திரட்டி எழுதப்பட்டவை. சுற்றுலா மேற்கொள்பவர்களுக்குப் பயன்படக் கூடியவை.
Reviews
There are no reviews yet.