Vaithiyar Ayothidhasar
பண்டிதர் அயோத்திதாசர் முன்னெடுத்திருந்த பௌத்தம் மருத்துவப் பணியைத் தலையாய அறமாக வலியுறுத்தியிருக்கிறது. சித்த வைத்தியத்தை மனித உடலில் நோயைத் தாண்டி முறையியலாகவும் பார்க்க முடியும்.
அம்முறையிலை வைத்து பண்டிதர் அயோத்திதாசர் பல்வேறு வைத்திய குறிப்புகளை எழுதி இருக்கிறார். மேலும் தமிழ் மொழியமைப்பும் பௌத்த மெய்யியலும் ஒன்றோடொன்று பிணைந்தவை என்று சொன்ன அயோத்திதாசர், தமிழைப் புரிந்து கொள்ளாதவர் பௌத்தத்தை அறிந்து கொள்ள முடியாது அல்லது பௌத்தத்தை புரிந்து கொள்ளாதவர் தமிழை அறிந்துகொள்ள முடியாது என்று சொன்னார். இங்கு எவையும் தனித்தனியாக இருப்பதில்லை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவையாகவே இருக்கின்றன. இந்தப் புரிதலிலிருந்து பௌத்தமும் தமிழும் மட்டுமல்ல வைத்தியமும் கூட இவற்றோடு பிணைந்தவையாக இருக்கின்றன என்கிற சமூக பண்பாட்டுக் கதையாடல் இந்நூலில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.