வெக்கை
பூமணி
சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ‘வெக்கை’ ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஓர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் அவற்றைத் தீர்மானிக்கும் சமூகப் பொருளாதாரக் காரணிகளைப் பற்றியும் ஆராயும் முனைப்புக் கொண்ட ஒரு நாவல் என்று சொல்வது இந்த நாவலைப் பற்றிய ஒரு எளிய புரிதலாகவே இருக்க முடியும். பூமணி எழுப்பும் கேள்விகள் இவற்றைக் காட்டிலும் முக்கியமானவை. ஒரு கலைஞன் என்ற முறையில் பூமணி பழியின் அரசியலையும் அறத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார். இவ்வுலகின் மீதான, தான் வாழும் நிலத்தின் மீதான ஆச்சரியங்களிலிருந்தும் குழந்தைமையின் பேதமையிலிருந்தும் விடுபட முடியாத ஒரு பதினைந்து வயதுச் சிறுவனின் மனம் பழியின் கொழகொழப்பான திரவத்தால் நிரப்பப்படும் பயங்கரம் எளிய, மிருதுவான சொற்களால் கலைப்படுத்தப்பட்டிருக்கிறது. வெற்றி, தோல்வி பற்றிய புழக்கத்திலிருக்கும் சொற்களைத் தன் தணிந்த குரலால் மறுக்கும் ஒரு கலைஞன் அவற்றின் விளைவுகளைக் குறித்துத் தன் வாசகனோடு நிகழ்த்தும் மிகத் துக்ககரமான உரையாடல் எனவும் இந்நாவலைச் சொல்லலாம்.

THE TWO BUBBLES
PFools சினிமா பரிந்துரைகள்
Quiz on Computer & I.T.
13 மாத பி.ஜே.பி ஆட்சி
Bastion
21 ம் விளிம்பு
English-English-TAMIL DICTIONARY
ARYA MAYA - The Aryan Illusion
Arya Maya (THE ARYAN ILLUSION)
RSS ஓர் அறிமுகம்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
Mother 


BOOK MARKS RAGAV –
https://youtu.be/2scrKmXHqDg
இக்காணொளி பதிவு வெக்கை நாவல் பற்றியதாகும். அந்த நாவல் எப்படிப்பட்டது? அதை ஏன் வாசிக்க வேண்டும் என்பது பற்றி அழகாக சொல்லும் காணொளி இது.
காணொளியை கண்டிப்பாக பாருங்கள். கண்டிப்பாக புத்தகம் வாங்கி வாசியுங்கள்