ஏதிலி

Publisher:
Author:

Original price was: ₹250.00.Current price is: ₹240.00.

ஏதிலி

Original price was: ₹250.00.Current price is: ₹240.00.

ஏதிலி நாவலுகுகு பொருத்தமான மதிப்புரையை எழுதிய Lakshmanasamy Odiyen Rangasamy அவர்களுக்கு நன்றி…

ஈழ முகாம்களோடோ அல்லது EROS TELO , EP, PLOTE LTTE போன்ற ஏதேனுமொரு விடுதலை இயக்கத்தோடோ தொடர்பில்லாத அரசியல் ஆர்வலர்களை அன்று தமிழகத்தில் காணவேமுடியாது..

பதட்டமும் கண்ணீரும் பெருமிதமும் கலவையாக இருந்த நாட்கள் அவை

குறிப்பாக, இங்கே உள்ள ஈழ அகதிகள் முகாம்களில் வாழும் ஒவ்வொருவருக்கு பின்னாலும், துயரம் நிறைந்த பயணக்கதையும் மனதை அறுக்கும் சோகச்சுமையும் கனன்றுகொண்டே இருக்கும்.

சொந்தமண்ணோடு சுதந்திரமிழந்த அவர்களின் சொல்லுக்குள் அடங்காத துயரச் சொல்லலை பலமுறை தூக்கமிழந்து கொட்டக்கொட்டக் நெஞ்சுகனக்க இரவுகள்தோறும் கேட்டிருக்கிறோம்

இவை ஏதாவது ஒரு படைப்பாய் வந்தால்.. ஒரு ஆவணமாக, ஏதிலி இலக்கிய வகைமையாக, காலம் கடந்து நின்று பேசும் என்று நினைத்ததுண்டு..அதை ஏதிலி என்ற நாவலாக கொண்டுவந்திருக்கிறார் முகாமில் வாழ்ந்த அ சி விஜிதரன்

வெறும் முகாமோடு அதை துண்டாடிவிடாமல் ஈழத்தில் நின்ற வாழ்வையும் இயல்பாகவே அவர் எழுதிச்செல்கிறார்..

304 பக்கம் கொண்ட ஏதிலியை விஜிதரன் அற்புதமாகக் கட்டியெழுப்பியிருக்கிறார்..ஒவ்வொரு பக்கமாய் கடந்து நாம் கரைந்துபோய் ஒரு முகாம்வாசியாகும் உணர்வை அனுபவிக்கமுடியும்.

 

Delivery: Items will be delivered within 2-7 days