Be the first to review “சிரியாவில் தலைமறைவு நூலகம்”
You must be logged in to post a review.
Original price was: ₹175.00.₹165.00Current price is: ₹165.00.
பஷார் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக டமாஸ்கஸின் புறநகர் தராயா கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அது கடும் முற்றுகைக்கு ஆளானது. முற்றுகை நீடித்த நான்கு ஆண்டுகள், அங்கு நரக வாழ்க்கைதான். பீப்பாய் குண்டு வெடிப்புகள், இரசாயன வாயு தாக்குதல்கள் போன்ற கொடுமைகளைத் தராயா எதிர்கொள்ள வேண்டி இருந்தது. வறுமை, பசி, பட்டினி ஆகியவை தலைவிரித்தாடின. பஷார் அல்-ஆசாத்தின் அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் போது, சுமார் நாற்பது இளம் புரட்சியாளர்கள் விசித்திரமான சபதமொன்றை எடுத்துக் கொண்டனர். தகர்த்தப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கும் கீழ் ஆயிரக்கணக்கான நூல்கள் சிதறிக்கிடப்பதையறிந்து, அவற்றைத் தோண்டியெடுத்து ஊரின் நிலத்தடிக்குக் கீழ் ஒரு நூலகம் அமைக்கத் தீர்மானித்தனர்.
புத்தகங்களை ஆயுதங்களாகக் கொண்டு எதிர்ப்பதென்பது ஓர் உருவகம்தான். எந்த ஓர் அரசியல் ஆதிக்கத்திற்கும், அல்லது மத ஆதிக்கத்திற்கும், அதனை ஓர் எதிர்ப்புக்குரலாகத்தான் கருதவேண்டும். ஒரு பக்கம் பஷார் அல்-ஆசாத்தும், இன்னொரு பக்கம், டாட்ச் எனும் தீவிரவாத இயக்கமும் தங்கள் ஆதிக்கத்தை வலுவடைய முயற்சி மேற்கொண்டிருக்கும்போது, ஒரு மூன்றாவது சக்தியாக அந்தக் குரல் ஒலித்தது. 2011 ஆம் ஆண்டு ஆசாத்துக்கு எதிர்ப்பாக வெடித்த அமைதி ஆர்ப்பாட்டங்களை அரசு அடக்கி ஒடுக்கியது. அதுபற்றிய இக்கதை பிரெஞ்சு பத்திரிகை நிருபர் ஒருவருக்கும் போராளிகளுக்குமிடையே ‘ஸ்கைப்’ வழியே நடைபெற்ற உரையாடல்கள் அடிப்படையில் சொல்லப்படுகின்றது. தன்னுரிமை, சகிப்புத்தன்மை, இலக்கியத்தின் மேலாண்மை ஆகியவற்றிற்கு இது ஒரு துதிப்பாடலாகும்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.