பின்நகர்ந்த காலம் (இரண்டாம் பாகம்)

Publisher:
Author:

Original price was: ₹125.00.Current price is: ₹116.00.

பின்நகர்ந்த காலம் (இரண்டாம் பாகம்)

Original price was: ₹125.00.Current price is: ₹116.00.

 

டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களை உலகம், இலக்கிய மேதைகள் என்று கருதுகின்றது. ஆனால், அவர்களது படைப்புகளின் அடிநாதம் சோகமே. ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய இதிகாசங்களிலும் இதுதான் இருக்கிறது. தற்கால நவீன இலக்கியங்களும் இந்தச் சோக அடிச்சுவட்டைத்தான் பின்பற்றி எழுதப்படுகின்றன.

க.நா.சு., சி.சு. செல்லப்பா போன்ற தமிழ் விமர்சகர்கள் மீது இருந்த மதிப்பு எனக்கு வெ.சா. மீது இல்லை. குறிப்பாக, அவருடைய ‘உள்வட்டம் வெளிவட்டம்’ என்ற தியரியில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதீத உணர்ச்சி வசப்பட்டவராகவே வெ.சா.வின் கட்டுரைகள், அவரை அடையாளம் காட்டுகின்றன. கிராமப்புறங்களில் நாட்டுப்புறத் தெய்வங்களுக்கு கொடைவிழா நடக்கும்போது அந்தக் கோவிலின் பூசாரி அல்லது சாமியாடிகள் அருள் வந்து சாமியாடுவார்கள். அந்த மாதிரி இலக்கியச் சாமியாடியாகத்தான் வெங்கட்சாமிநாதனை நான் மதிப்பிட்டேன்.

ஆன்மீகம், பக்தியின் அடிப்படையே, வேண்டுதலும் வேண்டுதல் நிறைவேற வழிபாடுகளும்தான். எனக்கு கடவுளிடம் கேட்கவும் வேண்டிக் கொள்ளவும் எதுவுமில்லை. அதனால், குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக எப்போதாவது அவர்களுடன் கோவிலுக்குச் செல்கிறேன். கோவிலில் நான் கடவுளை, பரம்பொருளைப் பார்க்கவில்லை. வெறும் கற்சிலைதான் கண்ணில் படுகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days