1 review for நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
Add a review
You must be logged in to post a review.
₹25.00
சமூகநீதிக் களத்தின் சரித்திர நாயகர்கள் வரிசை – 2
தியாகராயர் பெரிய செல்வந்தர். பணம் படைத்தவர். தியாகராயர் விரும்பியிருந்தால் வியாபாரத்தின் மூலம் பல இலட்சம் ஈட்டியிருக்கலாம்.
அவர் விரும்பியிருந்தால் சென்னையிலேயே பெரும்பாலான இடங்களைச் சொந்தமாக வாங்கியிருக்க இயலும்.
அவர் இவைகளையெல்லாம் பெரிதாக மதிக்க வில்லை. தம்முடைய சமூகத் தொண்டைத்தான் ஒரு பொருட்டாக மதித்தார். திராவிட சமூகத்தில் ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். அரசியலிலே நம்மவர்கள் முதலிடம் பெற வேண்டுமென்று அவர் விரும்பினார். தியாகராயர் போக போக்கியத்தை விட்டுத் தாமாகவே கல்லும் முள்ளும் காட்டாறும் கருங்குழியும் நிரம்பிய பாதை வழியே செல்லத் தொடங்கினார்.
அவர் களத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது. அவர் அன்று பறக்கவிட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின் கீழ் நின்றுதான் நாம் இன்று பணியாற்றி வருகிறோம்
– அறிஞர் அண்ணா
Delivery: Items will be delivered within 2-7 days
Art Nagarajan –
சர். பிட்டி. தியாகராயர்
“வெள்ளுடை வேந்தர்”
நீதிக் கட்சியின் தந்தை
1852ம் ஆண்டு
ஏப்ரல் 27ஆம் நாள்
சென்னை, கொருக்குப்பேட்டையில்
அய்யப்ப செட்டியார், வள்ளியம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக
தியாகராயர் பிறந்தார்
பெரும் தொழிலதிபராக,
நெசவு, மற்றும் தோல்
பதனிடும் தொழில்களில்
முத்திரை பதித்தவர்,
கைத்தறி நெசவில் குஞ்சம் இழுத்து நெய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர் தியாகராயர் அவர்களே!
தோல் பதனிடும்
தொழில் மூலம்
மேலை நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்தவர்,
இவர்களது ஆலைகளில்
பதனிடப்பட்ட தோல்
“பிட்டி”என்ற முத்திரையுடன்
வெளிநாடுகளில்
புகழ்பெற்றன!
ஆதலால் இவர்
பிட்டி. தியாகராயர்
என அழைக்கப்பட்டார்!!
இவரது
தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு குடியிருப்புகள் அமைத்துக்கொள்ள
பரந்துபட்ட நிலப்பரப்பை இலவசமாக வழங்கியவர் தியாகராயர்!
அது தியாகராயர் நகர்
என்று அழைக்கப்பட்டது
சென்னை மயிலாப்பூர்
கபாலி கோயிலின்
குடமுழுக்கு விழாவிற்கு பெருமளவில் நன்கொடை வழங்கிய இவரை
(சூத்திரனாக இருந்ததால்)
மேடையில் அமரவைக்காமல்
பிராமணர்கள்
கீழே உட்கார வைத்தனர்!
மேலும் இவருடைய அலுவலகத்தில்
வேலைபார்க்கும்
கடைநிலை ஊழியர்
ஒருவரை
பிராமணர் என்பதால்
மேடையில் அமர்த்தி தியாகராயரை
அவமானம் செய்தனர்.
கோயில் திருப்பணிக்கு
வாரி வாரி வழங்கும்
வள்ளலின்
“சுயமரியாதை”
கிளர்ந்தெழுந்தது குடமுழுக்கு நடைபெறுவதற்கு
முன்பே எழுந்து வந்துவிட்டார்.
தமிழகத்தில்
பிற்படுத்தப்பட்ட,
மற்றும்
ஒடுக்கப்பட்ட மக்கள்
மனுதர்மம், மற்றும்
வேதங்கள் மூலமாக வர்ணாசிரமத்தால் அடிமையாக்கப்பட்டார்கள்.
கல்வி மறுப்பு,
உரிமை மறுப்பு,
அறியாமை, வறுமை, போன்றவற்றில் மூழ்கிக்கிடந்தார்கள்.
இவைகளிலிருந்து பெரும்பான்மை மக்களான பிராமணரல்லாதோரை
விடுவிக்க,
ஒரு இயக்கத்தை
உருவாக்க வேண்டுமென்று பெரும் பங்காற்றியவர்
சர் பிட்டி தியாகராயர்.
1916 நவம்பர் 20ல்
“நீதிக்கட்சி” உருவாக்கப்பட்டது!
“தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என தொடங்கிய
அந்த இயக்கம், தனது கருத்துக்களை தாங்கிவரும் ஆங்கில நாளேட்டிற்கு
‘ஜஸ்டிஸ்’ என்று பெயரிட்டது.
அதை தொடர்ந்து
ஜஸ்டிஸ் கட்சி என்று அழைக்கப்பட்டது!!
1920ல் தமிழகத்தின்
முதல் சட்டமன்றத் தேர்தலில்
நீதிக்கட்சி
வெற்றி அடைந்தவுடன் முதலமைச்சர் பொறுப்பு இவரையே தேடி வந்தது,
ஆனால்
முதலமைச்சர் பொறுப்பை சுப்பாராயலு அவர்களை
ஏற்கச் செய்தார்.
கட்சி பொறுப்புகளில் மட்டும் இருந்தார்
இன்றயை சத்துணவுத் திட்டத்திற்கும்,
காமராஜரின்
மதிய உணவுத் திட்டத்திற்கும் முன்னோடியாக
சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தபோது மாநகராட்சிப் பள்ளிகளில்
1922ல் மதிய உணவு அளிக்க உத்தரவிட்டார்!
சென்னை
பின்னி மில்
தொழிலாளர்கள் போராட்டம்
திரு. வி. க தலைமையில்
நடந்தது.
நீதிக் கட்சி ஆட்சியில்
இருந்தாலும்
காவல்துறை அதிகாரம்
ஆங்கிலேயர்கள்
வசம் இருந்தது.
திரு வி. க. வை
கைது செய்யச் சொல்லி
உத்தரவு வந்தது.
அவரை கைது செய்வதானால் எங்களுக்கு
ஆட்சியே தேவையில்லையென்று வெலிங்டன் பிரபுவிடம் துணிச்சலாக பேசி
கைது உத்தரவை
ரத்து செய்தவர்
வெள்ளுடை வேந்தர்.
இவரது மக்கள் சேவையை பாராட்டி ஆங்கிலேய அரசு
1909ம் ஆண்டு
சனவரி 1ம் தேதி
‘ராவ் பகதூர் பட்டமும்’
1919ம் ஆண்டு
சனவரி 1ம் தேதி
திவான் பகதூர் பட்டமும் வழங்கியது!
மேன்மைக்குரிய
சர் பிட்டி தியாகராயர்
தனது 73வது வயதில்
1925 ஜூன் 23 ம் தேதியன்று சென்னையில்
காலமானார்.
வெள்ளுடை வேந்தரை
நினைவு கூறும் வகையில் சென்னையில்
“தியாகராய நகர்” உருவாக்கப்பட்டது,
அங்கேயே தமிழகஅரசு அவர்பெயரில்
அரசு விழாக்கள் நடைபெறும் அரங்கம்
ஒன்றை கட்டி உள்ளது.
அவர்பெயரில்
கல்லூரி ஒன்று உள்ளது.
ரிப்பன் மாளிகை
எனப்படும்
சென்னை மாநகராட்சி அலுவலகத்தின்
நுழைவாயிலில்
சர். பிட்டி. தியாகராயரின்
திரு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது
1959ம் ஆண்டில் சென்னை
மாநகராட்சி தேர்தலில்
முதல் முறையாக
தி. மு. க.
வெற்றி பெற்றவுடன்
சர். பிட்டி. தியாகராயருக்கு
மாலை அணிவித்து
மரியாதை செய்தனர்.
சென்னையில்
மத்திய அரசின் சார்பாக
மத்திய அமைச்சர்
ஆ. ராசா அவர்கள்
சர். பிட்டி. தியாகராயரின்
அஞ்சல் தலையை வெளியிட்டார்.
தமிழக முதல்வர்
கலைஞர் கருணாநிதி அவர்கள்
அஞ்சல் தலைகளை பெற்றுக்கொண்டு
சிறப்புரை ஆற்றினார்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்,
ART.நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.
01.06.2020.