போயிட்டு வாங்க சார்
ச. மாடசாமி
“Good Bye, Mr. Chips- 1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934இல் நூலாக வெளிவந்தது.நூலின் ஆசிரியர்-ஜேம்ஸ் ஹில்டன்.-இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர்.பெயர்-சிப்ஸ்.முழுப் பெயர் சிப்பிங்.முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்து,அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ்.”
சீ.ப்பி. செல்வம் –
சிப்ஸ் சார் ஒரு டீ கெடைக்குமா…?
“நானா பாவம்? எனக்கா குழந்தைகள் இல்லை? எனக்கு ஆயிரக்கணக்கில் பிள்ளைகள். ஆயிரக்கணக்கில்… என் பிள்ளைகளே..! நீங்க எங்க இருந்தாலும், இப்ப இந்த நேரத்தில் என்கூட இருங்க..!
இப்படி இதயம் கூவி அழைத்ததோடு ஆசிரியர் சிப்ஸ் அவர்கள் நீண்ட உறங்குவதற்கு சென்றுவிடுகிறார்… எங்கேயாவது ஒரு ஆசிரியரின் இயல்பான வாழ்க்கை இப்படி இருக்குமா என்று ஆசைப்படுவும் கேட்கவும் வைத்துவிடுகிறது இந்த புத்தகம் கற்பித்தல் பணியில் ஒருவர் அந்தப் பள்ளிக்கூடம் மாணவர்களுடன் எவ்வாறு இணங்கியிருக்கிறார் என்பது மட்டும் தான் முக்கியமே தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பு இருக்காது என்று எண்ண வைக்கிறது…ஆசிரியர் அவர்களுக்கு பாடங்களில் தெளிவும் கடமை தவறாமையும்தான் அவருக்கு மரியாதையை ஈட்டித் தந்தன.. மாணவர்களின் ஞாபகங்கள் தான் அவருக்கு எப்போதும் துணையாய் இருந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக இரக்கம் மட்டும் ஒரு ஆசிரியருக்கு போதாது; சூழலோடு இணைக்க வேண்டும்; அதுதான் மனிதத்தன்மை என்கிறார். நிறைய மதிப்பெண்கள் ரிசல்ட் என குறிவைக்கும் திறமைசாலிகள் மதிக்கப்படுகிறார்கள்; ஆனால் அவர்கள் நேசிக்க படுவதில்லை என்பது சிப்ஸ் ஆசிரியருக்கு மட்டும் தெரிந்தால் போதாது, நமக்கும் அந்த புரிதல் வேண்டும்.எளிய மனிதர்கள் அவமதிப்பை கூட தாங்கிக் கொள்கிறார்கள் ஆனால் அங்கீகாரத்தை தாங்க முடியாமல் உடைந்து போகிறார்கள் சில நேரங்களில் என்கிற வார்த்தை எவ்வளவு காத்திரமானது இந்த கதையில். ஆசிரியர்கள் பெரிய ஆட்களாக தங்களை நினைத்துக் கொள்வதும் இல்லை, மாணவர்கள் போலித்தனமான மரியாதையை ஆசிரியருக்கு தருவதும் இல்லை என்பது போன்ற வார்த்தைகள் எப்போதும் நிஜமாகவே இருக்கட்டும்.மாணவர்களுக்காகவும் அந்தப் பள்ளிக்காகவும் தொடர்ச்சியாக இயங்கிய சிப்ஸ் ஆசிரியர் இறுதியாக அவருடைய பணி ஓய்வு பெறும் நாளில் இவ்வாறு பேசுகிறார் “எத்தனையோ ஞாபகத்தில் இருக்கிறது… அதை எல்லாம் விட உங்கள் முகங்கள்… உங்களின் ஆயிரக்கணக்கான முகங்கள்… எப்போதும் என் ஞாபகத்தில் இருக்கும்… எனக்குள் இருக்கும் உங்களுக்கு வயதாவதே இல்லை…”. உண்மைதான் ஒரு எளிய மனது தன்னை சூழ்ந்திருக்கும் சூழலோடு ஒரு இணக்கமான உறவை வைத்துக்கொண்டால் எப்போதும் சிப்ஸ் போன்ற ஆசிரியருக்கு வயதாவதே இல்லை நண்பர்களே.. எப்போதும் மாணவர்கள் ஆசிரியர் சிப்ஸின் வீட்டிற்க்கு சென்றால் கண்டிப்பாக டீயும் கேக் கும் கொடுத்துதான் அனுப்பியிருக்கிறார். நமக்கும் ஒரு டீ கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஆசிரியர் சிப்ஸின் வீட்டிற்கு செல்வோம் நண்பர்களே….
கல்வி தளத்தில் பல்வேறு நூல்களை குறிப்பாக மாற்றுக் கல்வி குறித்து எழுதி வருகிற பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் இந்த புத்தகத்தினை எழுதி இருக்கிறார்கள். இந்த புத்தகத்தினை எழுதிய பேராசிரியர் அவர்களுக்கும், இந்த புத்தகத்தை வெளியிட்ட புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீட்டாருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நூலின்பெயர்: போயிட்டு வாங்க சார்
ஆசிரியர்: ச.மாடசாமி வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்