THERINJA CINEMA THERIYADHA VISHAYAM
சென்னை குரோம்பேட்டையில் வசிக்கும் இவரது சொந்த ஊர் திருச்சி. பிறந்து, வளர்ந்ததெல்லாம் வேலூரில்.டூல்ஸ் எஞ்சினியரிங் முடித்துவிட்டு பத்திரிகைத் துறைக்கு வந்த இவர், ‘பிலிமாலயா’, ‘பெண்மணி’, ‘சாவி’, ‘குங்குமம்’, ‘குமுதம்’, ‘தினமலர்’ இதழ்களில் பணிபுரிந்துவிட்டு இப்போது ‘குங்குமம்’ வார இதழுக்கு முதன்மை ஆசிரியராக இருக்கிறார். ‘கர்ணனின் கவசம்’, ‘சகுனியின் தாயம்’ ‘மாஃபியா ராணிகள்’, ‘உயிர்ப்பாதை’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து அச்சில் வரும் இவரது ஆறாவது புத்தகம் இது.
நூல் குறிப்பு :
‘தினகரன் வெள்ளிமலர்’ இணைப்பிதழில் வெளியான ‘டைரக்டர்ஸ் கட்’ தொடரின் நூல் வடிவம் இது.ஒவ்வொரு சினிமாவின் உருவாக்கத்துக்கும் பின்னால் இருக்கும் Behind the Scenes ஐ முடிந்தளவு இப்புத்தகம் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. வீழ்ச்சியை அல்ல. எண்ணற்ற சிரமங்களுக்கு இடையில் படைக்கப்பட்டதை வெளிச்சமிட்டுக் காட்ட முற்பட்டிருக்கிறது.
இதில் வெற்றிகள் இடம்பெற்றிருக்கின்றன. தோல்விகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. களைகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. Presence of Mind போற்றப்பட்டிருக்கிறது.எல்லாவற்றுக்கும் அடிநாதமாக நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கிறது. சினிமா என்பது கனவுத் தொழிற்சாலையும் அல்ல. களவுத் தொழிற்சாலையும் அல்ல. இதுவும் ஒரு தொழிற்சாலை. இதிலும் நல்லது கெட்டதுகள் உண்டு.அப்படிப்பட்ட ஒரு தொழிற்சாலையின் சில துளிகள்தான் இவை.
Reviews
There are no reviews yet.