INIDHU INIDHU VAZHDHAL INIDHU
காதல் மணமோ, நிச்சயிக்கப்பட்ட மணமோ – அன்பின் ஈர்ப்பு குறையாமலே, வாழ்வின் அடுத்தடுத்த அத்தியாயங்களை கடந்து செல்வதே அழகு. அதற்குத்தான் எத்தனை இடையூறுகள்? இந்த அவசர யுகத்தில் பொருள் தேடல் காரணமாக அன்புக்கு அளிக்கப்படுவது இரண்டாம் இடம்தானே? அன்பு குறைகையில் வம்பு மிகுவது வாடிக்கை. அவசியம் செய்ய வேண்டிய நல்ல விவாதங்கள் கூட வார்த்தைகளின் தடிப்பால் சச்சரவாக மாறும் சூழல் இப்போது அதிகம். சிறுதொடுதலில் பூக்கும் மலர்களை மறந்து, பெரும் சொற்களில் பிரிதலை விரும்பி வரவேற்பது தகுமா?
‘நீ, நான், நம் குழந்தைகள்’ என்கிற இனிய இல்லறத்திலும், நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டியவை ஏராளம் உண்டு. கூட்டுக்குடும்ப முறை அருகிவிட்ட நகரமயமாதலில் இல்லறத்துக்கும் வழிகாட்டல் அவசியமாகிறது. புதுமணத் தம்பதிகள் மட்டுமல்ல… திருமணத்துக்குத் தயாராகும் இளைஞர்கள் முதல் இல்லறத்தை நல்லறமாக்க விரும்பும் சீனியர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் படிக்க வேண்டிய வாழ்வியல் வழிகாட்டியே இந்நூல்.
Reviews
There are no reviews yet.