NEEDHI DEVADHAIKAL
அந்நிய ஆண் வீடு தேடி வந்தாலே ஓடிச் சென்று கதவுக்குப் பின்னே ஒளிந்துகொள்ளும் இந்தியப் பெண்கள் மட்டுமல்ல… சர்வதேச அரங்கிலும் பெரும் போராட்டத்துக்குப் பிறகே வழக்கறிஞராகப் பெண்கள் தங்களை நிலைநிறுத்தி இருக்கிறார்கள். கர்னேலியா சோரப்ஜி முதல் ஹிலாரி கிளிண்டன் வரை இப்படி உலகப் பெண்மணிகள் நீதிமன்றத்தில் எடுத்த களையையும் விதைத்த கலையையும் விரிவாக விளக்கியுள்ளார் வழக்கறிஞரும் எழுத்தாளருமான வைதேகி பாலாஜி.
இந்நூலை படித்த தாக்கத்தில் சட்டம் படிக்கும் ஆர்வம் பலர் மனதில் நிச்சயம் உருவாகும். நீதித் துறையை தவறி தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று வருத்தப்படுபவர்களுக்கு, ‘இல்லை… நீங்கள் சரியான பாதையில்தான் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்’ என்கிற உண்மையை உணர்த்தும். பெண் வழக்கறிஞர்களை திடப்படுத்தி மெருகேற்றி புடம்போட்டு புதிய உத்வேகத்துடன் பீடு நடைபோட்டு முன்னேறிச் செல்லவும் உதவும். ‘குங்குமம் தோழி’ இதழில் வெளியான சட்டத் துறையில் சாதித்த பெண்மணிகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பே அழகிய நூலாக வடிவம் பெற்றுள்ளது.
Reviews
There are no reviews yet.