PENKALUKKANA PUDHIYA THOZHILKAL
திருமணம், குழந்தைப் பேறு என்பதையெல்லாம் மீறி, இன்று ஒரு பெண்ணை முழுமைப்படுத்துவது பொருளாதார சுதந்திரம் மட்டுமே. வேலைக்குச் செல்கிறவர், வீட்டில் இருப்பவர் என இரு தரப்புப் பெண்களுக்குமே பொருளாதாரத் தேவை இருக்கிறது. வேலைக்குச் செல்கிறவர்களுக்கு கூடுதல் வருமானத்துக்கு வழி தேட வேண்டியிருக்கிறது. வீட்டில் இருப்பவர்களுக்கோ, அடிப்படைக்கே ஆதாரம் தேவையாக இருக்கிறது.
பிசினஸ் என்பது புதிர்களும் பயங்கரங்களும் நிறைந்த ஒரு மாறுபட்ட உலகம் என்பது பலரின் கற்பனையாக இருக்கிறது; ‘நமக்கு என்ன தெரியும்’ என சிலருக்குள் தயக்கம் தடுக்கிறது. ‘பிசினஸ் செய்ய புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை; நமக்குத் திறமை இருக்கும் ஒரு விஷயத்தில் நம்மை மெருகேற்றிக் கொண்டு களமிறங்கினால் போதும்’ என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் நூல் இது! வெறும் 100 ரூபாயில் ஆரம்பித்து சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வெற்றிகரமாகத் தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளதை இதில் அறிந்துகொள்ளலாம். (முதலீடே இல்லாமல் செய்வதற்குக்கூட 50 தொழில்களின் பட்டியல் தரப்பட்டிருக்கிறது!)
சிறுதானிய சமையல் முதல் மேக்ரமி ஒயர் கலைப்பொருட்கள் வரை, இன்ஸ்டன்ட் மிக்ஸ் முதல் ஃபெல்ட் பேப்பர் நகைகள் வரை எதிலும் பெண்கள் ஜெயிக்கலாம். ஒவ்வொன்றிலும் இப்படி ஜெயித்தவர்களே வழியையும் சொல்லிக் கொடுப்பது இந்த நூலின் பெரும் சிறப்பு!.
Reviews
There are no reviews yet.