Thamizhan Enbavan Ulagalaviya Manithan
மார்க்சியக் கோட்பாட்டாளர்களான கோவை ஞானி, அ.சிவானந்தன், கா.சிவத்தம்பி, தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலை பிரச்சனைகளான தேசியம்,பின் மார்க்சியம், சாதியம், பின் நவீனத்துவம் போன்றவை குறித்து உரையாடுகிறார்கள். உளவியலாளரான ராம் மஹாலிங்கம் சமகால உளவியல் ஆய்வு போக்குகள் மற்றும் சாத்திய நீக்கம் குறித்தும் உரையாடுகிறார்.ஈழப் பதிப்புலக முன்னோடியான இ.பத்மநாபர் ஐயர் ஈழப் பதிப்புத்துறை குறித்தும்,ஈழத் கவிஞர் மு.புஷ்பராஜன் தென்னாசிய அரசியல் பின்னணியில் ஈழம் குறித்து தமிழிலும், சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட நாவல்கள் குறித்தும்,தமிழ்த் திரைப்பட வரலாற்றாசிரியரான தியோடர் பாஸ்கரன் திரைப்பட அழகியல் மற்றும் வரலாறெழுதியல் குறித்தும், நாவலாசியர் திலகவதி வன்முறைக்கும் இலக்கியத்திற்குமான உறவு குறித்தும் உரையாடுகிறார்கள். படிக்காத தெரிந்த தொழிலாளியான ஜி.கஸ்தூரிசாமி தமது நெடிய இடதுசாரி அரசியல் வாழ்வில், என்றும் கலையாத அவரது கம்யூனிச கனவு குறித்து உரையாடுகின்றார். முதுபெரும் மார்க்சிய சிந்தனையாளரான எஸ்.என்.நாகராசன் தனது நெடிய இடதுசாரி வாழ்வின் அனுபவங்களை சமகால மார்க்சிய நடைமுறைகளுடன் வைத்து உரையாடுகிறார். கடந்த இருப்பது ஆண்டுகளில் யமுனா ராஜேந்திரன் மேற்கொண்ட ஒருங்கிணைந்த பதினான்கு உரையாடல்களின் தொகுப்பு இந்த நூல்.
Reviews
There are no reviews yet.