Pazhaiya Kurudi
உலகம் நமக்கு சமதளமாகவும் அசைவற்றதாகவும் தெரிந்ததை, ‘அப்படி இல்லை, அது கோள வடிவமாக, கொஞ்சம் சாய்ந்தவாக்கில், சுழன்றபடியே சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது’ என்று நாம் ஒப்புக்கொள்ளக் கடினமான தர்க்கத்தை அளித்த, அந்த ‘உண்மையான யதார்த்தத்தின் கண்டுபிடிப்பைப் போல்தான் புனைவுகளுக்குள் மறைந்திருக்கும் யதார்த்தக் கதைகளும். ஆனால், அந்த ‘உண்மையான யதார்த்தத்தை நம்மால் எந்நேரமும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. கோளத்தையும் சுற்றிக்கொண்டிருப்பதையும் பிரக்ஞையிலிருந்து அகற்றிவிட்டு – அதுதான் உண்மை என்றபோதும் – நாம் நம்புவது சமதளமாகவும் அசைவற்றதாகவும் தெரியும் இந்த உலகத்தின் புனைவு யதார்த்தத்தைத்தான். இப்படியான அம்சங்களையே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் வரித்துக்கொண்டிருக்கின்றன; சமதள அனுபவத்துக்கும் கோள அறிவுக்கும் இடையேயான உரையாடல்களாக விரிகின்றன.
Reviews
There are no reviews yet.