VIKRAMAADITHTHAN KATHAIGAL
நமது பாரத தேசத்தில் படிக்கப் படிக்கத் திகட்டாத எண்ணற்ற விசித்திரக் கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளுக்கு என்றும் சிறப்பிடம் உண்டு. பலப் பல கிளைக் கதைகளைக் கொண்ட இக்கதைகளின் மூலம் மனித வாழ்க்கைக்கான நீதி நெறிமுறைகள் போதிக்கப்பட்டுள்ளன. உஜ்ஜயினியில் வாழ்ந்த மன்னனான விக்கிரமாதித்த ராசாவின் வீர தீர பராக்கிரமங்களை கூறும்வண்ணம் அமைந்ததே இந்த வேதாளமும் முப்பத்திரண்டு பதுமைகளும் சொன்ன கதைகளாகும். இந்தக் கதைகள் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, கொடைத்திறம், தெய்வ பக்தி போன்றவற்றை விளக்கி படிப்போரை நல்வழிப்படுத்துகிறது. இக்கதைகள் யுக்திகள் நிறைந்தனவாய், படிப்போர் ஆர்வத்தைத் தூண்டுகின்றது. தீயவர்களை வதம் புரிதல், நல்லவர்களைக் காத்தல் போன்றவை தெய்வங்களின் செயல்களாய் காட்டப்படுகின்றது. கூடுவிட்டுக் கூடுபாய்தல், மாந்திரிகம் போன்ற நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட மாயாஜாலங்களையும் செய்கிறது. படிப்போம். ரசிப்போம். நல்லனவற்றைக் கடைபிடிப்போம்.
Reviews
There are no reviews yet.