ERPUDAYA VAAZHVUKAANA PORAATAM
அமைதியும் இணக்கமும் மிகுந்த வாழ்வையே மனிதர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அதை அடைவதற்குப் பெரும் போராட்டம் தேவைப்படுகிறது. மனிதர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் சிக்கல்கள் வாழ்க்கையை வலி மிகுந்த போராட்டமாக்கியிருக்கின்றன. எளிமையாகவும் நேரடியாகவும் வாழ்வுடன் நம்மால் உறவுகொள்ள முடியுமா? முடியும் எனில், அது எப்படிச் சாத்தியமாகும்? இறையியலாளரான சந்தோஷ் வாழ்வின் சிக்கல்களை விலக்கி, அதனுடன் இணக்கமாக உறவுகொள்வதற்கான வழிகளை இந்த நூலில் முன்வைக்கிறார். உயர்ந்த பீடத்திலிருந்து வழங்கும் அறிவுரையாகவோ வழிகாட்டுதலாகவோ அல்லாமல், நட்பார்ந்த உரையாடலாக இணக்கமான வாழ்வுக்கான தேடலை முன்வைக்கிறார். பல்வேறு தத்துவங்களையும் சமூக யதார்த்தங்களையும் மானுட இயல்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். இளைஞர்களைச் -சக பயணிகளாகக் கொண்டு அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
Reviews
There are no reviews yet.