ANDHA NERATHU NADHIYAL…
வாசிப்பு என்பது ஒரு ‘அந்தரங்கமான அனுபவம்’ என்பதிலிருந்து ‘அரசியல் செயல்பாடு’ என்பதுவரை பலவிதமான கருதுகோள்கள் இலக்கிய விமர்சனத்தில் இருக்கின்றன. அவையெல்லாமே படைப்பை அணுக ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே உதவக் கூடும். அதன்பிறகு வாசகன் தனியாகவே பயணிக்க வேண்டும். அவ்வகையில், தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் எழுத்துகளினின்றும் தான் பெற்ற வாசிப்பனுபவத்தை க. வை. இந்தக் கட்டுரைகளில் உவகையோடு விவரிக்கிறார். இவை அந்நூல்களைப் பற்றிய மதிப்பீடாக மட்டும் நின்றுவிடாமல் நாவல், சிறுகதை பற்றிய அவரது பார்வையை முன்வைப்பதாகவும் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு.
Reviews
There are no reviews yet.