Raththam Ore Niram
சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம். இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப் படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும், இலட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரமாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திரப் புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார். குமுதத்தில் கறுப்பு சிவப்பு வெளுப்பு என்ற பெயரில் சில அத்தியாயங்கள் வெளிவந்து கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்ததால் நிறுத்தப்பட்டு மீண்டும் ரத்தம் ஒரே நிறம் என்ற பெயரில் எழுதப்பட்டது இந்த நாவல்.
Reviews
There are no reviews yet.