செங்கிஸ்கான்:
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.
ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.
அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.
ART Nagarajan –
செங்கிஸ்கான்
முகில்
தலைப்பிரசவத்திற்கு காத்திருந்த 16வயது நிரம்பிய ஹோலூனை கடத்தி வந்து மனைவியாக்கிக் கொண்டார் அந்த இனக்குழுவின் தலைவர் “யெசுகெய்”.
உள்ளங்கையில் ரத்தக்கட்டியோடு பிறந்த அவளின் குழந்தைக்கு “டெமுஜின்” என்று பெயரிட்டார் யெசுகெய்.
டெமுஜின் என்றால்
அரசர்க்கு அரசன்
எனப் பொருள்.
“செங்கிஸ்கானின்” இயற்பெயரது.
அதிக இயற்கை வளங்களுடன் வாழ்ந்திடும் சீன மக்களுடன் அடிக்கடி மோதிக்கொண்டிருந்த, சைபீரிய காடுகளில் வாழும் ‘மங்கோல்’ என்ற நாடோடி
இன மக்களின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள குதிரைகள் தாண்ட முடியாத சுவர்களை கட்டினார்கள் சீனர்கள்.
மங்கோல் என்றால்
‘அருகிலிருக்கும் நெருப்பு’
என அர்த்தமாம். மங்கோலியர்களும்,
மற்ற எதிரிகளும் சீன எல்லைக்குள் குதிரைகளோடு வருவதை தடுக்கவே சுவர்கள் கட்டப்பட்டது.
பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வம்சத்தினரால் கட்டப்பட்ட சிறு, சிறு சுவர்களின் ஒட்டுமொத்த தொகுப்புதான்
இன்று உலகத்தால்
“சீனப் பெருஞ்சுவர்”
என அழைக்கப்படுகிறது.
பதினோறாம் நூற்றாண்டில்
கொரிய எல்லையான
யாலு நதியிலிருந்து,
கோவி பாலைவனம் வரை கட்டப்பட்ட இந்தச் சுவர்
சுமார் 6400 கிலோமீட்டர் நீளமுடையது.
ஒருங்கிணைந்த மங்கோலியா என்ற இலட்சியத்தை அடைய
ஒருசில தடைக்கற்களை தாண்டினால் போதுமானது என டெமுஜின் நினைத்தார்,
அதுவே நடந்தது.
சைபீரய காடுகளில் வாழும் அனைத்து குழுக்களையும் ஒருங்கினைத்தார், அனைவரும் மங்கோலியர்கள் என அழைக்கப்பட்டனர், அவர்களுக்கு
தானே தலைவரானார். ‘சிங்கிஸ்கான்’ என அழைக்கப்பட்டார். பின்னர்
பெர்சிய மொழி உச்சரிப்பில்
“செங்கிஸ்கான்” என அழைக்கப்பட்டார்.
இன்று உலகமெங்கும் கடைப்பிடிக்கும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் செங்கிஸ்கான் உருவாக்கியது.
எதிரி நாட்டுப் பெண்களை கடத்துவதை தடை செய்தார் எந்த ஒரு முடிவையும் தன் சகாக்களோடு கலந்து ஆலோசித்து முடிவு செய்தார்.
உலகையே கட்டி ஆளப்போகிறேன் என்று புறப்பட்டவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்களில் முதன்மையானவர் செங்கிஸ்கான்.
ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்த போது மங்கோலியா என்ற தேசமே கிடையாது. ஆனால்
உலகையே வென்ற மாவீரன் அலெக்சாண்டரின் தேசத்தை விட நான்கு மடங்கு பெரியது மங்கோலியா.
ஒரு சாமான்யன் ஒருவன் சாம்ராஜ்யத்தை கட்டியமைத்த ஆச்சரிய சரித்திரம் இது.
செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்
வாசகர் வட்டம் மதுரை 9894049160.
13.04.2020.