தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு:
“தேச விடுதலைக்கான இயக்கம் நடந்தபோதே சமூக சீர்திருத்தத்திற்கான இயக்கத்தைத் தமிழகத்தில் சிங்காரவேலர், பெரியார் ஆகியோர் நடத்தினர். அக்காலகட்டத்தில் இருந்த உடன்கட்டை ஏறல், பால்ய விவாகம், விதவைகள் அவலம், தீண்டாமை ஆகிய கொடுமைகளை அகற்ற நடந்த போராட்டங்களை இந்த நூல் விளக்குகிறது”
– என்.சங்கரய்யா (தினமணி, 11-4-1999)
“வரலாற்றை அறிந்தவர்களால் தான் வரலாற்றைப் படைக்க முடியும் என்பார்கள் . தன் இனத்தின் வரலாற்றை ஒவ்வொருவரும் அறிந்தாக வேண்டும். தாழ்ந்து கிடந்த தமிழினம் 19,20 ஆம் நூற்றாண்டுகளில் படிப்படியாகப் பெற்ற சமூக சீர்திருத்த மேம்பாட்டை சுருக்கமாக விளக்கும் நூல் இது. இதில் பேராசிரியர் அருணனுடைய உழைப்பை ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது.”
– சுப.வீரபாண்டியன் (முரசொலி, 31-3-2013)
Reviews
There are no reviews yet.