கற்கவேண்டும் என்று விரும்பினால் மட்டும் போதாது; அக்கறையோடும் ஆர்வத்தோடும் எப்படிக் கற்கவேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். திறன்களை வளர்த்துக்கொள்வது முக்கியம்; ஆனால் அதைவிட முக்கியம் உங்களுக்குள் இருக்கும் திறன்கள் என்னென்ன என்பதைக் கண்டறிவது. மகிழ்ச்சி முக்கியம் ஆனால் எது மகிழ்ச்சி என்பது தெரியவேண்டுமல்லவா?

 

சுவாரஸ்யமான நடையில், ஏராளமான எடுத்துக்காட்டுகளோடும் குதூகலமூட்டும் சிந்தனை வரைபடங்களோடும் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வை ஆச்சரியமூட்டும் வகையில் மாற்றியமைக்கப் போகிறது. உடற் பயிற்சி தொடங்கி மனப் பயிற்சி வரை; அறிவியல் தொடங்கி தியானம் வரை அனைத்தையும் புதுமையான முறையில் அறிமுகப்படுத்துவதோடு இவற்றைக் கருவிகளாகக் கொண்டு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எப்படியெல்லாம் வெல்லலாம் என்பதையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.

 

நீங்கள் மேல் படிப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவரா? வாழ்க்கை மேம்படவேண்டும் என்னும் விருப்பம் கொண்டவரா? உங்கள் மூளையின் ஆற்றலை முழுவதும் பயன்படுத்திக்கொள்ள துடிக்கிறீர்களா? கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். படிப்படியாக உங்கள் வாழ்க்கை மாறுவதைக் கண்ணாறக் காணுங்கள்.

 

“இந்தப் புத்தகம் மூளையைச் சிறந்த முறையில் பயன்படுத்து-வதைப் பற்றியது. இந்தக் கலையை அனைவருமே கற்க விரும்புவர். மூளை எப்படி வேலை செய்கிறது, எந்த விஷயம் மூளையைச் சுறுசுறுப்பாக்குகிறது, எதனால் அது சோர்ந்து-விடுகிறது என்பது குறித்து விளக்கும் விலை-மதிப்பில்லாத புத்தகம். இது தொழில் நிபுணர்களுக்கும் அத்தியாவசியமான புத்தகம்.”

– பிரதிபா ஐயர், CEO, Pratima Arts