மீசை என்பது வெறும் மயிர்

Publisher:
Author:
(1 customer review)

200.00

மீசை என்பது வெறும் மயிர்

200.00

நந்த ஜோதி பீம்தாஸ் அவர்களை ஜெர்மனில் சாகசப்பயணம் செய்து, அங்குள்ளத் தனித் தீவில் பல சிரமங்களுக்கிடையில் சந்தித்துப் பேட்டிக்கண்டு அவரின் “மீசை என்பது வெறும் மயிர்” நாவல் சுருக்கத்தினையும் நமக்கெல்லாம் வாசிக்கும் வாய்ப்பளித்து, நாம் பெருமையாய் பேசித்திரியும் நமது பண்பாட்டின் உண்மை முகத்தினைத் தோளுரித்துக்காட்டியுள்ளார்.அதாவது பீம்தாஸ் அவர்களின் வார்த்தைகளில் சொல்வதென்றால், பிணத்தை மேதகு பிணம் என்றாலும் நாறும் தானே அதைப்போல. இந்தப் புத்தகம் பற்றி எழுதிவிடவேண்டும் என்பதை, அதாவது மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்துவதில் ஏதேனும் குறை வந்துவிடுமோ என்கிற எண்ணத்தினால், ஒவ்வொரு நாளாய் தள்ளிப்போட்டு வந்து, இன்று எப்படியும் எழுதிவிடவேண்டும் என அமர்ந்துவிட்டேன். நந்திஜோதி பீம்தாஸ் அவர்கள் தான் அனுபவத்த வலிகளை, துயரம் மிகுந்த தனது வாழ்க்கையை தனது பேட்டிகளின் மூலம், இதனை வாசிக்கிற சாதாரண வாசகர்களிடம் கூட கடத்திவிடுகிற ஆளுமை நிறைந்தவராக இருப்பவரை, இவ்வளவு காலம் அறிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோமே என்கிற வருத்தம் வந்து இம்சிக்கிறது. ஆதவன் அந்தக்குறையை இப்போதாவது போக்கிவிட்டாரே. இதற்க்காக நம் தமிழ்ச் சமூகத்தால் போற்றிப் பாராட்டப்படுவோம் என்கிற மொக்கைக் காரணத்திற்காக இதனை ஆதவன் எழுதிவிடவில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பீம்தாஸ்ம் ஆதவனும் சிந்தனையில் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதால் பேட்டிகள் மொழியாக்கம் போல தெரியவேயில்லை.நான் வாசிக்கும் புத்தகங்களில் என்னைப் பாதிக்கும் பத்திகளுக்கு அருகில் கோடு போட்டு வைப்பது வழக்கம். இதனை முடித்துவிட்டுப் பார்த்தால் எல்லாப் பக்கங்களுக்கு அருகிலும் கோடு நிரம்பி இருந்தது. இதிலிருந்தே இந்தப் புத்தகத்தின் முக்கியத்தினை புரிந்துகொள்ளலாம்.நாம் பொது வெளியில், பணியிடங்களில், தொழிற்சங்கங்களில் சாதிகளற்றவர்கலாகக் காட்டிக்கொண்டும், குடும்பத்தில், சமூகத்தில் எந்த மாற்றத்திற்கும் முயற்சிக்காத நிலையினை,மனசாட்சியுள்ள மனிதர்களின் மனசாட்சியை உளுக்கி எடுக்கும் வேலையினை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது. ஆதவனையும் பீம்தாசையும் கண்டு வியக்கிறேன். அவர்களின் நோக்கத்திற்கு இசைவான போருக்கு நம்மைத் தயார்படுத்துவோம். வாழ்த்துகள் ஆதவன்.
————

Delivery: Items will be delivered within 2-7 days