1 review for ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள்!
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹70.00 Original price was: ₹70.00.₹65.00Current price is: ₹65.00.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
அனைத்தும் / General
Art Nagarajan –
ஜஸ்டிஸ் கட்சி
(நீதிக்கட்சி)
அரசின் சாதனைகள்!
பேராசிரியர். பு. ராஜதுரை.
இந்திய
துணைக்கண்டத்திற்கு வந்திறங்கிய
ஆரியப் பார்ப்பனர்கள், தமிழர்களைக் கொண்டே
கோயில்களை கட்டினார்கள்.
கோயில்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
கோயிலின் விதிகளுக்கு தமிழர்களை
கட்டுப்பட வைத்தனர்.
வர்ணாசிரமத்திற்கு தமிழர்கள் அடிமைகளானதால்
தமிழர்களின்
ஒற்றுமை சிதைந்தது.
பிராமணர், சத்திரியர்,
வைசியர், சூத்திரர், பஞ்சமர், என்ற தலைப்புகளில்
தமிழர்கள் பிரிக்கப்பட்டனர்.
கோயில்களுக்கு
நான்கு வாசல்கள்
அமைத்தனர்.
பிராமணர்களுக்கு
தெற்குவாசல்,
சத்திரியர்களுக்கு
மேற்கு வாசல்,
வைசியர்களுக்கு
வடக்கு வாசல்,
சூத்திரர்களுக்கு
கிழக்கு வாசல் என்று கோயில்களில்
நுழைவதற்கு
விதி வகுத்தனர்.
ஐந்தாம் சாதியராகிய
பஞ்சமர்களுக்கு,
எந்த வாசலும் இல்லை.
பஞ்சமர்கள்
கோபுரத்தை பார்த்து
கும்பிடு போட்டு விட்டு
செல்ல வேண்டும்
இதைத்தான்
“கோபுர தரிசனம் கோடிபெரும்”
என்றார்கள்
“சூத்திரனுக்கு
எதை வேண்டுமானாலும் கொடு, கல்வியை மட்டும் கொடுக்காதே” என்று மனுதர்மமும்,
வர்ணாசிரமமும் கூறுகிறது என்றார்கள்.
பார்ப்பனிய
அடிமைத்தனத்தை
எதிர்த்து போரிட
நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது!
1916ம் ஆண்டு உருவாக்கப்பட்ட
“தென்னிந்திய
நல உரிமைச் சங்கம்” என்பது
தென்னிந்திய
“சூத்திர-பஞ்சம” மக்களின்
விடுதலைக்காக போராடிய இயக்கமாகும்.
2000ம் ஆண்டுகளாக, அடிமைகளாக வாழ்ந்த
திராவிட சமுதாயத்தினர் தலைநிமிர்ந்து நிற்க
நீதிக்கட்சி அரும்பாடுபட்டது
பொருளாதார
வசதியோடு வாழ்ந்த பிராமணரல்லாதார்
சிலரின் முயற்சியால்
நீதிக் கட்சி உருவானது.
திராவிட இன மக்களை,
கல்வியிலும்,
வேலைவாய்ப்பிலும்,
இடம்பெறச் செய்வதற்கு,
பொருளாதாரத்தில் மேம்படவைப்பதற்கு,
இட ஒதுக்கீடு ஒன்றே
சிறந்த வழி என்று
அதை பெறுவதற்காக
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே
போராட்டத்தை நடத்தியவர்கள்
நீதிக்கட்சியின் தலைவர்கள்.
ஆட்சிக்கு வந்த பின்பு சட்டமாக்கியதை அமல்படுத்த போராடியவர்கள்,
நீதிக்கட்சியின் தலைவர்கள்.
பொப்பிலி அரசர்,
சிங்கம்பட்டி ஜமீன்தார்,
புதுக்கோட்டை இளவரசர்,
எஸ். என். துரைராஜா, போன்றோர் திராவிடத்திற்கு ஆற்றிய தொண்டுகள் கொஞ்சமா!
ஆங்கிலேயர்கள் இந்தியாவில்
நுழைந்தபின்புதான்
இந்த நிலை
மாறத் துவங்கியது.
அரசு வேலைகளில்
90சதமான இடங்களை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்திருந்ததை மாற்றி
எல்லாச் சாதியினருக்கும்
பங்கிடச் செய்தது நீதிக்கட்சி!
மனுதர்மத்தை
நொறுக்கிவிட்டு
சூத்திரர்கள் உள்ளிட்ட
எல்லாச் சாதியினரும்
கல்விகற்க வேண்டும் என்று
“தாமஸ் பாபிங்டன்
மெக்காலே” பள்ளிகளை உருவாக்கியதற்கு காரணம் நீதிக்கட்சி.
நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகளை
அட்டவணை போட்டு
தேதி வாரியாக
பட்டியலிடுகிறது
இந்த நூல்.
இந்திய வரலாற்றில்
சாம்ராட் அசோகனின் ஆட்சியை “பொற்காலம்”என்று அழைக்காதவர்கள்
வர்ணாசிரமத்தை
பாதுகாத்த
“குப்தர்கள்”
ஆட்சிக் காலத்தை
“பொற்காலம்” என்று அழைத்தார்கள்
அதைப்போலவே
இன்றைக்கு,
நீதிக்கட்சியின் சாதனைகளை மறைக்கச் செய்யும் முயற்சியை மேற்கொள்கிறார்கள்.
அதை இந்தநூல் முறியடித்து வெற்றி கொள்கிறது.
ஒருமுறை வாசித்து தெரிந்துகொள்ள வேண்டிய
நூல்!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்
புத்தக வாசல், மதுரை.
9894049160.
12.06.2020.