Be the first to review “தமிழ வள்ளலார்”
You must be logged in to post a review.
Original price was: ₹120.00.₹112.00Current price is: ₹112.00.
“தஞ்சையார்” என்று அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப்படும் மூத்த வழக்கறிஞர் ஐயா தஞ்சை அ.இராமமூர்த்தி அவர்கள், “தமிழ வள்ளலார்” என்ற இந்நூலை ஆழமான – அகலமான வாசிப்பு ஆற்றலுடனும், ஆராய்ச்சித் திறனுடனும் எழுதியுள்ளார். நூலின் பெயர் “தமிழ் வள்ளலார்” அன்று; தமிழ வள்ளலார்!
“தமிழ” என்ற சொல் பொருள் நிறைந்தது. “தமிழ” என்பது, தமிழின மரபு, தமிழ் மொழி முதலியவற்றின் சார்பாக உள்ள செய்திகளைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகிறது. ஏற்கனவே பாரதியார் “விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய் – எனக்குரைப்பாயே” என்று பாடினார். “சாதி” என்பதை இனம், தேசிய இனம் என்ற பொருளில்தான் பாரதியார் பயன்படுத்தினார். எடுத்துக்காட்டாக, இத்தாலிய சாதி – ஒற்றைக்கட்டு போல் இருக்கிறது என்று கட்டுரை ஒன்றில் அவர் கூறினார்.
தமிழர் மறுமலர்ச்சிச் சிந்தனைகள் 19ஆம் நூற்றாண்டில் கிளர்ந்தெழுந்தன. ஐரோப்பாவில் 16 – 17ஆம் நூற்றாண்டுகளில் சுடர்விட்ட மறுமலர்ச்சிச் சிந்தனைகள் நமக்கு 19-ஆம் நூற்றாண்டில் தான் கனன்றது. பிற்கால சோழ – பாண்டியப் பேரரசுகள் வீழ்ச்சியடைந்த பின் – தமிழர்கள் அயல் இனங்களின் ஆட்சிகளில் சிக்கி அடிமைப்பட்டதுதான் இந்தக் காலத் தாழ்வுக்குக் காரணம்!
ஆன்மிகத்தின் வழியாக நம் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களைப் புறக்கணிப்பதற்கும், சமத்துவமும் அறமும் சார்ந்தியங்கும் தமிழர் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்வதற்கும் “தமிழ வள்ளலார்” நூல் மிகவும் பயன்படும்!
– பெ. மணியரசன்
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.