“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவுசெய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தர்க்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைபடச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார். சந்துருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளையும் சட்டம் என்ற சட்டகத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அணுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறார். “

கனம் கோர்ட்டாரே!
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: கே.சந்துரு₹275.00
8 in stock
“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Delivery: Items will be delivered within 2-7 days

கனம் கோர்ட்டாரே!
Red Love & A great Love
அறிவுத் தேடல்
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
விண்ணளந்த சிறகு
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
குமரப்பாவிடம் கேட்போம்
Voice of Health
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
Reviews
There are no reviews yet.