கோதாவரி பாருலேகர் : பழங்குடி மக்களின் தாய்

Publisher:
Author:

25.00

கோதாவரி பாருலேகர் : பழங்குடி மக்களின் தாய்

25.00

நமது மாயாஜால கதைகள் ‘கூடு விட்டு கூடு பாய்தல்’ பற்றி பேசும். ஒரு உயிர் வேறொரு உடலுக்குள் பாய்வதாக அவை பேசும். ‘வாடிய பயிரைக் கணடபோது தானும் வாடிய’ ஆன்மிக உணர்வும் ஒரு வகை கூடு பாய்தல்தான். ஆங்கிலம் அதை Empathy என்கிறது. மற்றவர்கள் வாழும் சூழல் எனும் கூட்டுக்குள் நம்மை பாய்ச்சி, அவர்களாகவே உணர்தல் அது.

வார்லி ஆதிவாசிகளின் வாழ்நிலைக்குள் கூடு பாய்ந்த எமது தோழர் கோதாவரி எழுதிய புத்தகத்தை நாங்கள் ஏற்கெனவே ‘மானுடம் விழித்தபோது’ ,‘ஆதிவாசிகள் புரட்சி’ எனும் பெயரில் தமிழுக்குள் கொண்டுவந்திருக்கிறோம். மக்களின் வரலாற்றை எழுதிய அந்தத் தலைவியின் நூற்றாண்டு நினைவு தினம் வந்ததையொட்டி, அவரது வரலாறு பற்றி அசோக் தாவ்லே எழுதியதுதான் உங்களின் கைகளில் இருக்கிறது. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுகளின் பரிமாணங்களை விவாதிக்காமல், அவற்றிலிருந்து போராட்ட ஆயுதங்களை உருவாக்காமல் சமூகம் முன்னேற முடியாது.

சவுத் விஷன் புக்ஸ் நிறுவனம் எத்தனையோ வரலாறுகளைக் கொண்டுவந்திருந்தாலும் இன்னும் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

கூடு பாய்தல் மட்டும் சமூகத்தில் தேவையான அளவுக்கு செழித்து வளர்ந்திருந்தால் சமூகம் இன்னும் எவ்வளவோ கூடுதலாக வளர்ச்சியடைந்திருக்கும். எத்தனையோ களங்களில் அர்ப்பணிக்கப்பட்ட எத்தனையோ மக்களின் வாழ்வுகள், தலைவர்களின் வாழ்வுகள் பதிவாகாமல் போய்க்கொண்டிருக்கின்றன.அவற்றின் செய்திகளையும் பரிமாணங்களையும் விளக்கவும் மறுவிளக்கம் தரவும் உங்களுக்கு கூடு பாய்தல் அவசியம். அந்தத் திறன் வளர இந்தப் புத்தகம் உதவும்.

Delivery: Items will be delivered within 2-7 days