அகிலங்களின் வரலாறு

Publisher:
Author: ,

Original price was: ₹400.00.Current price is: ₹385.00.

அகிலங்களின் வரலாறு

Original price was: ₹400.00.Current price is: ₹385.00.

Agilankalin Varalaru

2019-மூன்றாம் அகிலத்தின் நூறாவது ஆண்டு

மூன்றாவது அகிலம் அமைத்தல் 1919

முதல் உலக யுத்தத்திற்கு பின் – வெற்றிபெற்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே உலக பங்கீட்டுக்காக பிணக்குகள் – இந்த புதிய பங்கீட்டை அமலாக்குவதற்கு பன்னாட்டு சபை ஏற்படுதல் அனைவரும் அறிந்ததே.

கம்யூனிஸ்டுகள் முதலிலிருந்தே வெர்சயில்ஸ் உடன்படிக்கையை கண்டித்தனர். மிதவாத சோஷல் டெமாக்ரட்கள் அதனை அமல் படுத்துவதற்கு பணியாற்றத் துவங்கினர்.
மிதவாத சோஷல் டெமாக்ரட்கள் 1919 பிப்ரவரி மாதத்தில் பெர்னி நகரத்தில் கூடி இரண்டாம் அகிலத்தின் சவத்திற்கு உயிர் வழங்க முற்பட்டார்கள்.

இந்த கூட்டத்தில் மிதவாதிகள் பகிரங்கமாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை கண்டித்தனர். முதலாளித்துவ ஜனநாயகத்தை புகழ்ந்தனர்.
இந்த கூட்டத்துடன், மிதவாத சோஷல் டெமாக்ரட்கள் முதலாளிகளைவிட அதிகமாக சோவியத் யூனியனை நிந்தித்தல் துவங்கியது.

இந்த நேரத்தில், ரஷ்ய, போலந்து, ஹங்கேரி, ஜெர்மன், ஃபின்லாந்து நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் – மற்றும் சில கம்யூனிஸ்ட் கட்சிகள் – மொத்தம் 8 கட்சிகள், மாஸ்கோவில் கூடி, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி பெயரால் மூன்றாம் அகிலம் அமைப்பை நிறுவுதலுக்கு உலக மாநாட்டிற்காக அழைப்பை விடுத்தனர்.

இந்த அழைப்பை ஏற்று 33 நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் மாஸ்கோவில் 1919 மார்ச் 2 -ல் கூடினார்கள். இந்த மகாசபை மூன்றாவது அகிலத்தை நிறுவியது. உலகம் முழுமையிலும் சோஷலிசத்தை கட்டமைத்தலே தனது லட்சியமாக அறிவித்தது.

முதல் காங்கிரஸ் செயல் திட்டம்

இந்த முதல் காங்கிரஸ் துவக்கத்திலேயே ஜெர்மன் தொழிலாளிவர்க்கத்தின் சார்பில் வீரத்துடன் போராடி உயிர்நீத்த லீப்னெக், ரோசா லக்சம்பர்க் இருவருக்கும் அஞ்சலி செலுத்தியது.

இந்த காங்கிரஸை வரவேற்று லெனின் இவ்வாறு கூறினார்:
“நமது மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.”
“முதலாளிவர்க்கம் எவ்வளவு வேண்டுமானாலும் எரிச்சலடையட்டும், லட்சக்கணக்கான தொழிலாளர்களை கொலை செய்யட்டும், இறுதி வெற்றி நமதே. உலகப் புரட்சியின் வெற்றியை தவிர்க்க முடியாது.”
(மூன்றாம் அகிலத்தின் வரலாறு – ஃபாஸ்டர் – இரண்டாவது வால்யூம் – பக்கம் 10)

இந்த காங்கிரஸ் உலகத் தொழிலாளி, கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு வழிகாட்டியாக பிரதானமாக இரண்டு ஆவணங்களை தயார் செய்தது. ஒன்று, மூன்றாம் அகிலத்தின் செயல்திட்டம் – இரண்டு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் பற்றிய லெனின் தீசிஸ்.

இந்த காங்கிரஸ் அறிவித்த தீர்மானங்கள் – செயல்திட்ட அறிக்கை. அனைத்திலும் – உலகத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் பாதையைக் குறித்தே பிரதானமாக விவாதிக்கப்பட்டது. முதல் உலக யுத்தத்திற்குபின் நிலைமையை பரிசீலித்து, தொழிலாளிவர்க்க லட்சியத்தையும், அதனை அடைவதற்கு தேவையான ஸ்தாபனத்தையும், அதனை அடைவதற்கான வியூகத்தையும் – நடைமுறை உத்திகளையும் ஸ்தூலப்படுத்தியது.

Delivery: Items will be delivered within 2-7 days