அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

பாடல் பிறந்த கதை
பைசாசம்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
கணிதத்தின் கதை
The History of Prathaba Mudaliar
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
புருஷவதம்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
கற்றுக்கொடுக்கிறது மரம்
நீதிநூல்கள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
வளம் தரும் விரதங்கள்
அந்தக் காலம் மலையேறிப்போனது
அறிவுத் தேடல்
மிதக்கும் வரை அலங்காரம்
லிபரல் பாளையத்து கதைகள்
அண்ணாதுரைதான் ஆளுகிறார்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
உப்பு நாய்கள்
ஒற்றன்
கனவைத் துரத்தும் கலைஞன்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
அத்யாத்ம ராமாயணம்
சமனற்ற நீதி
மொழிப் போரில் ஒரு களம்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
திருவாசகம் பதிக விளக்கம்
மானுடம் வெல்லும்
பச்சைக் கனவு
இனியவை நாற்பது
அராஜகவாதமா? சோசலிசமா?
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
Voice of Health
புயலிலே ஒரு தோணி 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்