Annal Ambedkar: Avathoorkalum Unmaikalum
ஈராக்கிலும் லிபியாவிலும் விலை மதிப்பற்ற எரிபொருளைக் கொள்ளையடிப்பதற்கு அந்நாட்டு அதிபர்கள் (மாவீரர்கள் சதாம் உசேன், கடாபி) மீது அவதூறுகளைத்தான் ஏகாதிபத்தியம் முதலில் பரப்பியது. அம்மக்களைக் கொண்டே அத்தலைவர்களைக் கொன்று அம்மண்ணையும் பண்பாட்டையும் சிதைத்தெறிவதற்கு கருத்தியல்
வன்மங்களே அடித்தளமிட்டன.
இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பான்மை தொல்குடியினர் மீது ‘காலில் பிறந்தவர்கள்’ என்றும் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்றும் கருத்தியல் வன்மங்களை கடவுளின் பெயரால் – பார்ப்பனியம் கட்டமைத்தது. இதன் விளைவாக, ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட சூத்திர, கீழ் ஜாதிப் பட்டங்களோடு ஊருக்கு உள்ளும் புறமும் பகை முரண்களோடு
அடிமைப்பட்டுள்ளனர்.
சதுர்வர்ணக் கருத்தியல் வன்மங்களால் படிநிலைப்படுத்தப்பட்ட சாதியினரிடையே சமத்துவத்தை நிலைநிறுத்த, தம் வாழ்நாள் முழுவதும் தணலில் வெந்த புரட்சியாளர் அம்பேத்கரை – அவர் மறைவிற்குப் பிறகு – தன்வயப்படுத்த இந்துத்துவம் முயல்கிறது. அம்பேத்கரை அவமதிக்கும் இம்மோசடிக்கு மேலும் வலுசேர்க்க, முற்போக்கு முகமுடியுடன் ரங்கநாயகம்மாக்கள் முளைத்துள்ளனர்.
அவமதிக்கப்படும் ஒவ்வோர் அம்பேத்கர் சிலையும் எப்படிப் பன்மடங்காகிறதோ, அதே போல அருண் ஷோரி மற்றும் ஜெயமோகன்களின் அவதூறுகளுக்குப் பிறகும் அம்பேத்கரின் எழுத்துகள் அறிவாயுதங்களாய் திக்கெட்டும் முகிழ்த்தெழத் தவறவில்லை. அம்பேத்கர் சிலைகளை அவமதிக்கும் வன்கொடுமைகளுக்கும் அவர்தம் எழுத்துகள் மீதான கருத்தியல் வன்மங்களுக்கும் எவ்வித
வேறுபாடுமில்லை.
தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்குப் பெயரளவிலாவது தண்டனை உண்டு. ஆனால், வன்மங்களுக்கு (கருத்து)ச் சுதந்திரம் உண்டே வன்மங்களுக்கு கட்டற்ற சுதந்திரம் இருக்கும் நிலையில் வன்கொடுமைகள் அதிகரிக்காமல் என்ன செய்யும்? விளைவு: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தலித் மக்கள் மீது 16 வகையான வன்கொடுமைகள் ஜாதி இந்துக்களால் நிகழ்த்தப்படுகின்றன..
ஒருபுறம் வன்கொடுமைகளை எதிர்ப்பவர்களாகவும் மறுபுறம் – அதற்குக் காரணமான – வன்மங்களை ஆதரிப்பவர்களாகவும் செயல்படும் ஜாதி இந்து முற்போக்காளர்களின் வன்முரணை இந்நூல் அம்பலப்படுத்துகிறது.
ஒடுக்கப்பட்ட மக்கள், மரிஜ்ஜாப்பிகளையும் ரங்கநாயகிகளையும் தங்கள் புத்தியைக் கொண்டே புறந்தள்ளுவார்கள் என்பதற்கு இந்நூலே சிறந்த சான்றாயுதம்.
– புனித பாண்டியன்
ஆசிரியர் – ‘தலித் முரசு

நான் நாகேஷ்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Arya Maya (THE ARYAN ILLUSION)
விலங்கு கதைகள்
21 ம் விளிம்பு
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
RSS ஓர் அறிமுகம்
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
2700 + Biology Quiz
விக்கிரமாதித்தன் கதைகள்-1
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
மருத்துவ டிப்ஸ்
விவேகானந்தா வரலாறு
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
English-English-TAMIL DICTIONARY Low Priced
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
பன்னிரு ஆழ்வார்கள்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
2800 + Physics Quiz 

Kumaran –
Extraordinary Book
Usman –
அண்ணல் குறித்து வாசிக்க வேண்டிய நூல்..