5 reviews for அரியநாச்சி
Add a review
You must be logged in to post a review.
₹160.00
அரியநாச்சி
நான் ரத்தம்பற்றியே எழுதுகிறேன் என்பார்கள். ஆம். என் கதைகளில் எழுத்துகளாக வழிவது அரியநாச்சியின் ரத்தமே! அரியநாச்சி, ஆப்பநாட்டு பெண் தெய்வம். இவளின் தொப்புள்கொடி பெருக்கம். நானூத்தி சொச்சம் திசைகளில் வேர்பாய்ச்சிப் படர்ந்து கிடக்கிறது. இந்தக் கதையில், அங்கமெங்கும் இருட்டுச் சாம்பலை குழைத்துப் பூசி, மண்ணுக்குள் புதைந்திருப்பவளின் மௌனப் பெருமூச்சில் பொங்கிப் பிரவகிக்கிறது சுடுரத்தம்.
Delivery: Items will be delivered within 2-7 days
Silambarasan –
வேல ராமமூர்த்தி அவர்களின் அரியநாச்சி.கிராமத்து கதைக்களம்.கோபமும் ஆத்திரமும் கொண்ட மக்களின் வாழ்வை கோபம் எப்படி குலமறுக்கிறது என்பதை ரத்தமும் சதையுமாய் உணர்வுகள் கலந்து மண்வாசனையுடன் எழுதியிருக்கிறார்.
கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவிக்கின்றார் வெள்ளையதேவன்.தாய் சிறுவயதில் இறந்து விட தந்தையும் சிறைக்கு சென்று விட அத்தை வள்ளியின் அரவணைப்பில் வளர்கிறார்கள் அரியநாச்சி,பாண்டி ,மாயழகி.சக்கரைத்தேவனை மணந்து கொள்ளும் அரியநாச்சி நிறைமாத கர்ப்பிணியாக சிறைக்கு சென்று தன் தங்கை மாயழகிக்கு தன் கொழுந்தன் சோலையை மணம் முடிக்க தன் தந்தையிடம் அனுமதி கேட்பதாக தொடங்குகிறது கதை.
இதைப்பிடிக்காத பாண்டியின் மனைவி குமராயி தன் கணவனிடம் சொத்தை அவர்கள் அபகரிக்கவே இப்படி செய்கிறார்கள் என வஞ்சனையை கிளறி விட தொடங்குகிறது பிரச்சனை.அதனால் அவசர அவசரமாய் மாயழகிக்கும் தன் கொழுந்தன் கருப்பையாவிற்கும் மணம் முடிக்க நினைத்து வேலையை தொடங்குகிறான் பாண்டி.
கடைசியில் அனைத்தும் சமாதானமாகி கருப்பையாவிற்கும் மாயழகிக்கும் திருமணம் நடந்து முடிகிறது.திருமணம் முடிந்த கையோடு நான்கு கொலைகளும் விழுந்து முடிவடைகிறது கதை.கோபம் நிச்சயம் குலமறுக்கும் என்னும் கருத்தை ஆழமாக பாய்ச்சி இறுதியில் அழுகின்றாள் அரியநாச்சி.
Silambarasan –
கிராமத்து கதைக்களம்.கோபமும் ஆத்திரமும் கொண்ட மக்களின் வாழ்வை கோபம் எப்படி குலமறுக்கிறது என்பதை ரத்தமும் சதையுமாய் உணர்வுகள் கலந்து மண்வாசனையுடன் எழுதியிருக்கிறார்.

அரியநாச்சி கிராமியக்கதை.சாதியக் கட்டமைப்புக்குள் வாழும் மக்களின் வாழ்வில் கோபமும் ஆத்திரமும் இத்தகைய மாற்றங்களை உருவாக்குகிறது என்பதே கதை.
அரியநாச்சியின் தந்தை வெள்ளையத்தேவன் ஒரு கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவிக்கின்றார்.தாயை சிறுவயதிலேயே இழந்து பெரும் வருத்தத்திற்கு உள்ளாகும் அரியநாச்சி ,அவள் தம்பி பாண்டி,தங்கை மாயழகி ஆகிய மூவரும் அத்தை வள்ளியின் அரவணைப்பில் வளர்கிறார்கள்.
அரியநாச்சி வெள்ளாளங்குளத்து சக்கரைத்தேவனுக்கு வாக்கப்பட்டு போகின்றாள்.பாண்டிக்கு குமராயியை மணம் முடித்து வைக்கிறார்கள்.
மாயழகியை தன் கொழுந்தன் சோலைக்கு மணம் முடித்து வைக்க நினைக்கிறாள் அரியநாச்சி.ஆனால் சொத்திற்காகவே இப்படி அவள் நினைக்கிறாள் என்று தன் கணவன் பாண்டியிடம் சேர்த்து சொல்லி பிரச்சினைக்கு வழிவகுக்கிறாள் குமராயி.பாண்டியும் தன் கொழுந்தன் கருப்பையாவிற்கு மாயழகியை மணம் முடித்து வைக்க வேலைகளை முன்னெடுக்கிறான்.
வள்ளி தான் வெள்ளாங்குளத்திற்கு சென்று சமாதானம் செய்து அரியநாச்சியை திருமணத்திற்கு வரச்சொல்லுகிறாள்.திருமணத்திற்கு தன் தம்பி சோலையையும் உடன் அழைத்துச் செல்லுகிறார் சக்கரத்தேவன்.ஒருவழியாக திருமணம் நடந்து முடிகிறது.அரியநாச்சிக்கும் அங்கேயே பிரசவம் ஆகிறது.
இறுதியில் ஒரு பிரச்சினை முற்றி கொலைகளோடு நிறைவுறுகிறது கதை.ஆத்திரம் நிச்சயம் குலமறுக்கும் என்ற கருத்தை ஆழமாக பாய்ச்சி கண்கலங்க செய்கிறாள் அரியநாச்சி.குலம் அழிந்தது தெரியாமல் விடுதலை பெற்று வெளி வருகிறார் வெள்ளையத்தேவன்.
Sumi Hari –
கதையின் நாயகி அரியநாச்சி ,ஏதோ கொலைக்குற்ற தண்டனையில் ஜெயிலில் இருக்கும் தன் தந்தையை காண நிறைமாத கர்பிணியாய் வருவதில் தொடங்குகிறது கதை.
கோபம், இப்படிக்கூட செய்ய விடுமா என்று ஆச்சரியத்துடனேதான் வாசிப்பைத் தொடரமுடியும்.சிறு வயதிலேயே தாயை இழந்து,தந்தையும் தண்டனை பெற்று விட்டதில்,தன் தம்பி பாண்டியையும்,தங்கை மாயழகியையும் தாயாய் வளர்க்கிறாள் திருமணத்திற்கு முன்பே வாழ்வை இழந்த தன் அத்தையுடன் சேர்ந்து.பார்த்து வளர்த்த தங்கையை தன் கொழுந்தனுக்கே மணம் முடித்து வைத்து அருகிலேயே வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறாள்.தம்பி மனைவியோ தன் தம்பிக்கு மாயழகியை பரிசம் போட்டு அரியநாச்சியின் ஆசையை அழிக்கிறாள்.மாயழகியின் திருமணத்தில் நடக்கும் சம்பவங்களே கதைக்கு முடிவு.சிறிய கோபம் மனித வாழ்வில் எப்படி மாற்றங்களை ஏற்படுத்துகிறது,குலத்தையே வேரறுக்க செய்கிறது என்பதையே அரியநாச்சி கூறுகிறது.விடுதலை பெற்றுத் திரும்பப்போகிறார் அரியநாச்சியின் தந்தை வெள்ளயத்தேவன்,தம் இரு பெண்களும் கணவனை இழந்து நிற்கிறார்கள் என்பதை அறியாமலே.கடைசி அத்தியாயங்கள் வேகமாய் முடிக்கப்பட்டது போல தோன்றும்.தென்னக மக்களின் வாழ்வில் எவ்வளவு எளிதாக நடக்கிறது வெட்டும்,குத்தும்.கனத்த மனதுடனேதான் வாசிக்க முடியும்.