Ariyappadaatha Thamizhmozhi
- கல்தோன்றி மண்தோன்றா – தமிழ்ப் பொய்யா?
- திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?
- அணுவைத் துளைத்து – தமிழர் அறிவியலா?
- முருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?
- ஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?
- எது முதல் திணை? – குறிஞ்சியா? முல்லையா?
- தமிழ் மறைப்பு அதிகாரம்
- துக்கடாக்கள்:
- சொல் = Sol-ஆ? Chol-ஆ?
- சித்திரையா? தையா?
- திராவிடமா? தமிழா?
- தொல்காப்பியத்திலேயே சாதி உண்டா?
- சிலப்பதிகார – கம்ப ராமாயணச் சண்டை!
- இலக்கண அரசியல்
- நாட்டுப்புறத் தமிழ்
- சொல், செப்பு, பறை! பூ, அலர், மலர்!
- தமிழகத்தின் ஊர் பேர் விகுதிகள்
பின்னுரை
- பின்னுரை: அறிவியல் தமிழ், Meme தமிழ், வளர் தமிழ்!
- பின் இணைப்பு: வடமொழி விலக்கு அகராதி!
தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்கள் மொழிநுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களும் பெருமை பெறுகிறார்கள்; மொழியும் பெருமை பெறுகிறது.
– கவிப்பேரரசு வைரமுத்து
இந்நூல் தெளிவும், செறிவும், திட்பமும், நலனும் நிறைந்து விளங்கும் ஓர் அரிய நூல். தமிழிலக்கியப் பகுதிகளில் அறியப்படாத இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்டும் ஒப்பற்ற பனுவல் இது எனலாம்.
– அ. கலியமூர்த்தி, IPS (Former Superintendent of Police, Tiruchirapalli)
பல தமிழறிஞர்களின் நூல்களைத் தேடித் தேடி படித்தால் கிடைக்கக் கூடிய செய்திகளை, ஒரு பிழிவு போல இந்த நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார் கே.ஆர்.எஸ்.
– கா.ஆசிப் நியாஸ், கனடா
Bhojan –
மொத்தம் 14 தலைப்புகள் இந்த புத்தகத்தில் உள்ள எல்லாவற்றையும் சங்க பாடல்கள் மூலமாகவும் , அறிவு பூர்வ தர்கங்கள் மற்றும் சான்றுகள் மூலம் நிறுவ முயன்றதே இந்த நூலின் சிறப்பு.
முதல் தலைப்பு கல்தோன்றி மண்தோன்றா என்ற தலைப்பு தான் நாம் எப்போதும் இந்த வாசகத்தை சொல்வோம் ஆனால் அதில் உள்ள உண்மை தன்மை என்று தெரிந்து கொள்ள வேண்டும் அதாவது ஐந்து வகை நிலங்கள் தோன்றுவதற்கு முன்பே ஆதிக்குடிகள் தங்கள் ஆநிரை காக்க போர் செய்தனர் என்று சொல்வது தான் இந்த வரிகளின் பொருள் என்று நிறுவுகிறார்.
ரெண்டாவது தலைப்பு திருக்குறள் பற்றியது குறிப்பாக திருக்குறள் மத நூலா அல்லது மத சார்பற்ற நூலா அது போல உலக பொது மறை என்று குறிப்பதன் அர்த்தம் என்ன அது போல ஒரு குறளுக்கு வேறுவேறு அர்த்தம் இருக்க காரணம் என்ன அது போல அதற்கு உரை எழுதியவர்கள் அதை எப்படி மாற்றினார்கள் எனப்து போன்ற செய்திகள் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
மூன்றாவது தமிழர்களிடம் இருந்த அறிவியில் ஆனால் அந்த அறிவியல் என்பது வேறு நாம் தற்பெருமை பேசும் அறிவியல் என்பது வேறு என்று சொல்லி இருக்கிறாரா குறிப்பாக அணுவை துளைத்து என்று ஔவையார் பாடும் பாடலின் உண்மை தன்மை என்ன என்று சொல்கிறார்.அது போல ஔவையார் என்பது யார் ஒரேயொரு ஔவை மட்டும் தான் இருந்தார்களா இல்ல பல ஔவை உண்டா என்று சான்றுகள் உடன் சொல்கிறார் .
அது போல முருகன் தமிழ்கடவுளா , ஆறுபடை வீடுகளின் அர்த்தம் என்ன , தமிழ் மொழி எவ்வாறு மறைக்க பட்டது , சாதி எனப்து எதை குறிக்கிறது ஜாதி எதை குறிக்கறது , கம்ப ராமாயணம் சொல்லவது என்ன ,சிலப்பதிகாரம் சொல்லும் செய்தி என்ன , தமிழ் திராவிடம் எது உண்மை , தமிழ்நாட்டில் ஊர் பேர்கள் என்ன என்ன போன்ற பயனுள்ள தகவல்கள் இதில் இருக்கிறது.