ASAKAVATHALAM
இன்று வாழ்வை முழுநேரமும். வியப்புகளையும் நெகிழ்வான, குழந்தைமையின் அழகியலோடும் அதேசமயம் அப்பட்டமான குரூரங்களோடும் உலகைக் தர்க்கப்படுத்திக்கொண்டிருக்கும் மனப்போக்கிற்கு மத்தியில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்களால் பிரபஞ்சத்தின் மறுபக்கத்தைத் திறந்துகாட்ட முனைகிறது கவிதை. சில இடங்களில் படிமங்களாக, உருவங்களாக, சில இடங்களில் அகச்சிக்கல்களாக, இன்னும் சில இடங்களில் சிந்தனைகளாகத் தேங்கிவிட்ட ஞாபகங்களை அன்றாட வாழ்க்கையில் வைத்து அர்த்தம்தேடும். முயற்சியை பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகள் கச்சிதமாகவே செய்கின்றன. தன்னிச்சையாகத் தோன்றும் சிறுசிறு எளிமையான மொழியின்மூலம் கூறிச்செல்கின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். இவற்றைக் காணவிரும்பும் ஒருவனின் படைப்புகள் என்று குறிப்பிடலாம்.
Reviews
There are no reviews yet.